உங்கள் பற்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் பானங்கள் எவையெல்லாம் என்பதை தெரிந்து கொள்வோம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 01, 2024

Hindustan Times
Tamil

நாம் அன்றாடம் பருகும் பானங்களும் பற்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில பானங்கள் உங்களது பற்களை சேதமடை செய்யலாம்

பற்களுக்கு நன்மை தரக்கூடிய பானங்கள் சில இருக்கின்றன. அவற்றை பருகுவதை வழக்கமாக்கி கொள்ளலாம்

தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் எச்சில் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் வாய் பகுதிகள் சுத்தமடைவதுடன், பற்களின் எனாமல் பழுது பார்க்கப்படுகிறது

அடர் பச்சை நிறை இலைகள் கொண்ட காய்கறிகளான கேலே, பசலை கீரை போன்றவற்றில் அதிகப்படியான வைட்டமின் பி, கால்சியம் நிரம்பியுள்ளன. இவை ஈறு நோயை எதிர்த்து, பற்களை வலுப்படுத்துகிறது

பற்களில் துவாரங்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது க்ரீன் டீ. சாப்பிடும் உணவுகள் பற்களில் சிக்கிக்கொள்ளாமல் வெளியேற்றுகிறது. எச்சில் உற்பத்தியை அதிகரித்து வாய்வழி ஆரோக்கியத்த பேனி பாதுகாக்கிறது

அமிலங்கள் போன்றவை கலக்கப்படாமல் தயார் செய்யப்படும் இயற்கையான ஜூஸ்கள் பற்கள் ஆரோக்கியத்துக்கு, வாய்வழி சுகாதாரத்துக்கும் நன்மை தரும்

பாலில் இடம்பிடித்திருக்கும் கால்சியம், புரதம், பாஸ்பரஸ் போன்றவை பற்களை பலப்படுத்தி, ஈறு நோய்கள் ஏற்படாமல் தடுப்பதுடன், பற்களின் எனாமலை பழுதுபார்த்து வலுப்படுத்துகிறது

தேனுடன் தப்பி தவறியும் சேர்ந்து சாப்பிடக்கூடாத உணவு பொருள்கள் எவை என்பதை பார்க்கலாம்