தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sexual Issues : செக்ஸ் ஹார்மோன்களால் அவதியா பெண்களே? இதோ இந்த ஆயுர்வேத மூலிகைகள் உதவும்!

Sexual Issues : செக்ஸ் ஹார்மோன்களால் அவதியா பெண்களே? இதோ இந்த ஆயுர்வேத மூலிகைகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Feb 27, 2024 12:12 PM IST

Sexual Issues : பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை சமமாக்கும் 6 ஆயுர்வேத மூலிகைகள் – பாலியல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறதுஉ

Sexual Issues : பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை சமமாக்கும் 6 ஆயுர்வேத மூலிகைகள் – பாலியல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது
Sexual Issues : பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை சமமாக்கும் 6 ஆயுர்வேத மூலிகைகள் – பாலியல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

நம் உடலில் உள்ள அனைத்து வகை ஹார்மோன்களையும் சரியான அளவில் சுரந்தால் தான் பெண்களின் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். செக்ஸ் நலம் உள்ளிட்ட முழு உடல் நலனும் பாதுகாக்கப்படும். 

ஹார்மோன்கள் இனப்பெருக்க இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பாலியல் தூண்டுதல், ஆற்றல், மனநிலை அனைத்துக்கும் ஹார்மோன்களே காரணமாகின்றன. ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்போது, பெண்களுக்கு சிறந்த செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.

ஹார்மோன்கள் சமநிலையில் சுரக்கவில்லையென்றால், அது மாதவிடாயில் ஒழுங்கின்மை, மனநிலையில் மாற்றம், உணர்வுகள் தூண்டப்படாமை உள்ளிட்ட மற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் பிரச்னைக்கு ஆயுரிவேத மூலிகைகள் அதிகளவில் உதவுகின்றன. அவை குறித்து தெரிந்துகொள்வோம்.

சரியான அளவு சத்துள்ள உணவுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் ஹார்மோன் பிரச்னைகளை கடந்து பெண்கள் நல்ல வாழ்க்கையை வாழலாம். அதற்கு இந்த ஆயுர்வேத மூலிகைகள் உதவும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா, எண்டேக்ரைன் சிஸ்டத்துக்கு ஊக்கமளித்து, பெண்களின ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. இதனால் பெண்களின் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மாதவிடாய் சரியாக ஏற்படுவதற்கு உதவுகிறது. பாலியல் உணர்வை தூண்டி, ஹார்மோன்கள் சரிவிகிதமின்மையால் ஏற்படக்கூடிய மனநல பிரச்னைகளை தடுக்கிறது. சோர்வை குறைக்கிறது.

சதாவரி

சதாவரி பெண்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த டானிக் போன்று கருதப்படுகிறது. ஹார்மோன் சமநிலைக்கு உதவி, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கிறது. மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது. சதாவரியில் உள்ள அஃப்ரோடிசியாக் பண்புகள் பெண்களுக்கு பாலியல் ஆசையை தூண்டி, உடலுறவின்போது பிறப்புறுப்பில் சுரக்கும் திரவத்தை அதிகரிக்கச் செய்கிறது.

திரிபலா சூரணம்

அனைத்துக்கும் சிறந்தது. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது. கழிவு நீக்கத்துக்கு உதவுகிறது. உடலுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. நன்றாக செரிமானத்துக்கு உதவி, ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. ஹார்மோன்கள் வளர்ச்சி மற்றும் கழிவு நீக்கத்துக்கு உதவுகிறது.

கோக்ஷீரா

ஆயுர்வேதத்தின் வயாகரா என்று அழைக்கப்படுகிறது. இது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பாலியல் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. ஹார்மோன் சமமின்மையால் ஏற்படும் அறிகுறிகளை போக்குகிறது. கோக்ஷீரா ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அது செக்சுவல் செயல்பாட்டுக்கு உதவுகிறது.

லோத்ரா

ஹார்மோன்கள் சரிசமமாக சுரப்பதற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகளுள் ஒன்று லோத்ரா, இது பொதுவாக பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது. அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் வலிக்கும் மருந்தாகிறது. பெண்ணுறுப்பு ஆரோக்கியம் மற்றும் செக்ஸ் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

மக்கா

மக்கா, ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. செக்சுவல் இயக்கத்தை அதிகரிக்கிறது. எண்டோக்ரைன் சிஸ்டத்துக்கு உதவுகிறது. பாலியல் உணர்வை அதிகரிக்கிறது. மக்கா, ஹார்மோன் சமமின்மை, மனநிலை மாற்றம் மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகளை போக்குகிறது.

இவை உங்கள் பாலியல் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவினாலும், தீவிர பிரச்னைகளுக்கு நீங்கள் நிச்சயம் மருத்துவரை அணுகவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்