Sepankizhangu Fry : சேப்பங்கிழங்கு வறுவல்; வெரைட்டி சாதத்தின் ஈடு இணையற்ற துணை! நாவூறும் சுவையில் செய்வது எப்படி?
Sepankizhangu Fry : சேப்பங்கிழங்கில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள், கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைக்கிறது. கண் பார்வை கூராக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு – அரை கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
சீரகத் தூள் – 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இடித்த பூண்டு (விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்)
செய்முறை -
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்க்கவேண்டும். பின்னர் சேப்பங்கிழங்கு சேர்த்து 20 நிமிடம் வேகவிடவேண்டும்.
பின்னர் நன்றாக ஆறியவுடன், தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத் தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
பின்பு சேப்பங்கிழங்கில் மசாலாவை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து பின் நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து வறுக்கவேண்டும்.
பின்னர் இடித்த பூண்டு சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் வறுக்கவேண்டும்.
அட்டகாசமான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
இதை அனைத்து வெரைட்டி சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துடன் இது அட்டகாசமாக இருக்கும்.
சேப்பங்கிழங்கு, இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஒரு கிழங்குதான். இதை இதுபோல் ரோஸ்டாகி சாப்பிடுவது மிகுந்த சுவையைத்தரும். ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த சைட் டிஷ்.
இந்த வறுவலுக்கு, முதலில் சேப்பங்கிழங்கை நன்றாக வேகவைக்க வேணடும். பின்னர், மசாலா சேர்த்து நன்றாக ஊறவைக்கவேண்டும். அடுத்து அதை பதமாக எண்ணெயில் வறுத்து எடுக்கவேண்டும். வேக வைப்பது அதிகமாகிவிட்டால், கிழங்கு குழைந்துவிடும். எனவே பதமாக வேகவைக்க வேண்டும். கட்டாயம் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
சேப்பங்கிழங்கின் நன்மைகள்
சேப்பங்கிழங்கில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை இதய நோய்கள், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மையைத் தருகிறது.
சேப்பங்கிழங்கில் இரண்டு வகையான மாவுச்சத்துக்கள் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் கார்போஹைட்ரேட்களை மெதுவாக உறிஞ்சுகிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி உள்ளது. அது ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது.
நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். இதனால், அடிக்கடி சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளும் குணமாகும்.
சேப்பங்கிழங்கில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள், கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைக்கிறது. கண் பார்வை கூராக்க உதவுகிறது.
சேப்பங்கிழங்கில் உள்ள மெக்னீசியச்சத்துக்கள் தசைகள் மற்றும் எலும்பை வலுவாக்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
டாபிக்ஸ்