தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Does Bathing In Salt Water Cause Hair Loss

Hair loss: உப்பு தண்ணீரில் குளித்தால் முடி உதிருமா? - என்ன சொல்கிறது அறிவியல்! - மருத்துவர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 22, 2024 09:52 PM IST

நமது தலையில் இருந்து முடி உதிர்வதைதான் முடி உதிர்தல் என்று சொல்கிறோம். பெரும்பான்மையாக, முடியின் வேர் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினையின் காரணமாகதான் முடியானது உதிரும். ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிரும். இன்னும் சிலருக்கு சத்துக் குறைபாட்டால் முடி உதிரும்.

உப்புத் தண்ணீரில் குளித்தால் முடி உதிருமா?
உப்புத் தண்ணீரில் குளித்தால் முடி உதிருமா?

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “நம்மில் பெரும்பான்மையான மக்கள் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள். அது போரில் இருந்து வரக்கூடிய தண்ணீரோ, கிணற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீரோ அல்லது கார்ப்ரேஷன் தண்ணீரோ என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், இதில் உப்பு அதிகமாக இருந்தால் முடி கொட்டுமா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

காரணம் என்ன என்று கேட்டால், ஊரில் இருக்கும் வரை முடி நன்றாக இருந்தது, வேலை நிமித்தமாக வெளி இடங்களில் குடி பெயரும் சமயத்தில், அங்கு உள்ள தண்ணீரை பயன்படுத்தும் பொழுது முடி கொட்டுவதாக சொல்கிறார்கள். 

நமது தலையில் இருந்து முடி உதிர்வதைதான் முடி உதிர்தல் என்று சொல்கிறோம். பெரும்பான்மையாக, முடியின் வேர் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினையின் காரணமாகதான் முடியானது உதிரும். ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிரும். இன்னும் சிலருக்கு சத்துக் குறைபாட்டால் முடி உதிரும். 

சிலருக்கு வயோதிகம் காரணமாக முடி கொட்டும். முடி என்பது நம்முடைய தலையில் ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் இருக்கும். அதில் உப்பு தண்ணீர் படும் போது, அது அடி ஆழத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு கிடையாது. ஆகையால் முடி உதிர்தலுக்கு உப்பு தண்ணீர் ஒரு காரணமாக அமையாது. 

மழை தண்ணீர், ஆறுகளில் இருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் உள்ளிட்டவற்றை சாஃப்ட் வாட்டர் என்று அழைக்கிறோம். காரணம் அதில் உள்ள சத்துக்கள். அதேபோல போர்வெலில் வரக்கூடிய தண்ணீரை ஹாட் வாட்டர் என்று அழைக்கிறார்கள்

இந்த ஹாட் வாட்டரில் உப்பு உள்ளிட்ட சில சத்துக்கள் இருக்கின்றன. இவை நம் முடியின் மீது படும்பொழுது, முடியின் வேருக்குச் செல்லாமல், முடியின் மேலே வேலை செய்து, அதை உடைய வைக்கலாம். 

ஆகையால் முடி உதிர்வுக்கு நாம் உப்பு தண்ணிரை குறை சொல்ல முடியாது. மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலும் உப்பு தண்ணீரால், பெரிதளவு முடி பாதிப்பு அடைவதில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. 

முடி வளர்ச்சியில் முட்டையின் பங்கு - மருத்துவர் கார்த்திகேயன்!

முடி வளர்ச்சியில் நமக்கு அதிக நன்மை தரக்கூடிய உணவு முட்டை முட்டையை நீங்கள் உணவாக எடுத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் தலையில் தடவினாலும் சரி, இது உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். காரணம் என்னவென்றால் முடிக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் முட்டையில் இருக்கின்றன.

குறிப்பாக பயோட்டின், வைட்டமின் ஏ வைட்டமின் டி, ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்கள் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிகமாக உள்ளது. அதே போல முட்டையில் செலினியம் மற்றும் ஜிங்க் சத்து இருக்கிறது. இவை நமது முடி வளர்ச்சிக்கு மிக மிக உதவி கரமானதாக இருக்கும்.

. முட்டையில் உள்ள மஞ்சள் கருவையும் ஆலிவ் ஆயிலையும் மிக்ஸ் செய்து தலையில் அப்ளை செய்யலாம். அப்ளை செய்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அதனை நன்றாக ஊற விட வேண்டும் அதன் பின்னர் ஷாம்பு போட்டு குளியுங்கள். இதனை வாரத்திற்கு இருமுறை நீங்கள் செய்யலாம்.

நமது தலை முடி புரதத்தால் ஆனது. முட்டையில் உள்ள வெள்ளைக் கருவில் அதிகமான புரதச்சத்து இருக்கிறது. இதனை தேங்காய் எண்ணெயுடன் மிக்ஸ் செய்து கூட நமது தலையில் அப்ளை செய்யலாம். இந்த முறையிலும் நமது தலைமுடியானது பாதுகாக்கப்படுகிறது

முட்டையை உணவாக எடுத்துக் கொள்ளும் பட்சத்திலும் எந்தவித பிரச்சினையும் வராது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கூட தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் அந்த முட்டை அவிக்கப்பட்ட முட்டையாக இருக்க வேண்டும்.

முட்டையால் அலர்ஜி ஏற்படும் நபர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்றால் தயவு செய்து முட்டை எடுத்துக் கொள்வதையோ அல்லது முட்டையை எக் மாஸாக அப்ளை செய்வதையோ நிறுத்திக் கொள்ளுங்கள்.

இவை மட்டுமில்லாமல் பாதாம் நட்ஸ் வகைகள், மீன், சர்க்கரை சர்க்கரை வள்ளி கிழங்கு, பூசணி விதைகள், சியா விதைகள் உள்ளிட்டவையும் முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

முடி வளர்ச்சிக்கும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இனிப்பு சர்க்கரை சேர்த்த உணவை தவிர்த்து விடுங்கள்!

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்