தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Salem Halwa Puttu : சேலம் ஸ்டைல் அல்வா புட்டு! ஈசியான இனிப்பு! சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு சாப்டுங்க!

Salem Halwa Puttu : சேலம் ஸ்டைல் அல்வா புட்டு! ஈசியான இனிப்பு! சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு சாப்டுங்க!

Priyadarshini R HT Tamil
Oct 31, 2023 11:04 AM IST

Halwa Puttu : சேலம் ஸ்டைல் அல்வா புட்டு. ஈசியான இனிப்பு. சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு சாப்டுங்க. மாலையில் பள்ளி விட்டு வரும் குழந்தைங்களுக்கு செய்துகொடுத்து அசத்துங்கள்.

Salem Halwa Puttu : சேலம் ஸ்டைல் அல்வா புட்டு! ஈசியான இனிப்பு! சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு சாப்டுங்க!
Salem Halwa Puttu : சேலம் ஸ்டைல் அல்வா புட்டு! ஈசியான இனிப்பு! சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு சாப்டுங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

வெல்லம் – 1 கப்

ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்,

சுக்குத் தூள் – அரை ஸ்பூன்,

நெய் -1 ஸ்பூன்,

குட்டிக் குட்டியாக வெட்டிய தேங்காய் – ஒரு கப்.

செய்முறை –

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும் அல்லது இட்லிக்கு ஊறப்போடும்போது அதிலிருந்தும் எடுத்துக் கொள்ளலாம்.

வெல்லத்தை காய்ச்சி பாகு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாகு ரொம்ப கெட்டியாக இல்லாமல் புளி கரைசல் போல தண்ணீராக இருக்க வேண்டும்.

ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் அரைத்து மோர் பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும். அரை கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ள வேண்டும்.

கரைத்த அரிசி தள தளவென பால்போல இருக்கும். இன்னும் கொஞ்சம் நீர் வேண்டுமனாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

கடாயை சூடாக்கி இந்த தண்ணீயாக கரைத்த அரிசி மாவை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

நிறுத்தாமல் கிளற வேண்டியது அவசியம். மாவு கட்டி தட்டாமலும், அடி பிடிக்காமலும் பிரட்டி கிளறவேண்டும்.

மாவு கெட்டியாகிவரும் அப்போது வெல்லப்பாகு, தேங்காய் துண்டுகள் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவேண்டும்.

தொடர்ந்து கிளறி அல்வா பதம் வரும்போது நெய் ஊற்ற வேண்டும். ஒரு நிமிடம் கிளறி சுக்குத்தூள் தூவி, பளபளப்பாக தெரியும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு தட்டில் மெல்லிய ஈரத்துணி விரித்து, கிளறிய அல்வாவை இட்லி மாவு ஊற்றுவதுபோல ஒரு கரண்டியில் எடுத்து விரித்த துணி மீது தனித்தனியாக ஊற்றவும்.

இது ஆறியதும் நீங்கள் கரண்டியில் ஊற்றிய அளவில் செட் ஆகிவிடும். அதை எடுத்து பரிமாறவேண்டும். மிக எளிமையான ருசியான இனிப்பு இது. இதை வெண்ணெய் புட்டு என்றும் சொல்வார்கள்.

வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி அல்லது சர்க்கரையும் சேர்க்கலாம். ஆனால் வெல்லம் தான் நல்ல ருசியாக இருக்கும். நெய் & சுக்கு சேர்க்கத் தேவையில்லை இருப்பினும் சிறிது சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும். முந்திரி, திராட்சை வேண்டுமானாலும் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், தேங்காய்ப்பல்லே நல்ல சுவை தரும்.

WhatsApp channel

டாபிக்ஸ்