தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : குழந்தைப்பருவத்தில் அதிர்ச்சிக்குள்ளானவரா? உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பை பாருங்க!

Relationship : குழந்தைப்பருவத்தில் அதிர்ச்சிக்குள்ளானவரா? உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பை பாருங்க!

Priyadarshini R HT Tamil
Dec 27, 2023 12:00 PM IST

Childhood Trauma : குழந்தைப்பருவத்தில் அதிர்ச்சியை சந்தித்திருந்தால், அது உங்கள் செக்ஸ் வாழ்க்கை ஆரோக்கியத்தை பாதிக்கும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Relationship : குழந்தைப்பருவத்தில் அதிர்ச்சிக்குள்ளானவரா? உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பை பாருங்க!
Relationship : குழந்தைப்பருவத்தில் அதிர்ச்சிக்குள்ளானவரா? உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பை பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைப்பருவ அதிர்ச்சி என்றால் என்ன?

குழந்தைப்பருவத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் ஒருவரின் உடல், உணர்வு மற்றும் மன ரீதியிலான நலன்களில் பாதிப்புகள் ஏற்படும்.

குழந்தைப்பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சியான சம்பவங்கள், பல்வேறு வகைகளில் வெளிப்படும். அதில் உடல் ரீதியிலான வன்முறை, உணர்வுகளை புறந்தள்ளுதல், பாலியல் வன்முறை மற்றும் வீட்டு வன்முறை என பல வகைப்படும். 

இந்த வன்முறைகள் தீவிரவாத பாதிப்புகள், பேரிடர் பாதிப்புகள், பள்ளியில் ஏற்பட்ட பிரச்னைகள், குழந்தைப்பருவத்தில் இழந்த மனம் விரும்பிய நபர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர் என அவை பலவகைப்படும். 

இதுபோல் குழந்தைப்பருவத்தில் பாதிக்கப்படுவது ஒருவரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக செக்ஸ்வல் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குழந்தைப்பருவ அதிர்ச்சி எவ்வாறு வளர்ந்தபின் பாதிப்பை ஏற்படுத்தும்?

விளக்க முடியாத அச்சத்தை அது ஏற்படுத்தும்

நாள்பட்ட மனஅழுத்தம்

உறவுகளை ஏற்படுத்துவது மற்றும் தக்கவைத்துக்கொள்வதில் கஷ்டம்

சுய அழிவு நடவடிக்கைகள்

குற்றவுணர்வு அவமானம் சுமப்பது

உடல் ரீதியான அறிகுறிகள்

தலைவலி, உடல் வலி, செரிமான பிரச்னைகள். இவற்றிற்கு மருத்துவ ரீதியான காரணங்கள் இருக்காது.

குழந்தைபபருவ அதிர்ச்சி பெண்களின் செக்ஸ் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?

நெருக்கமாக இருப்பதில் பிரச்னை

குழந்தைப்பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சி நெருக்கமாக இருப்பதில் பெண்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்த சவால்கள் நம்பிக்கை மற்றும் உணர்வுரீதியாக உங்கள் பார்ட்னருடன் திறந்தமனதுடன் இருப்பது என பல்வேறு சவால்கள் ஏற்படும்.

உடல் தோற்றம் குறித்த அக்கறை

குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி பெண்களின் உடல் தோற்றம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். தாங்கள் குறித்த எதிர்மறை எண்ணங்களே தோன்றும். இதுவும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, செக்ஸில் மகிழ்ச்சியை குலைக்கும்.

செக்ஸ்வல் செயலிழப்பு

குழந்தைப்பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சி பாலியல் ரீதியான செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆர்கசம் ஏற்படாது, செக்ஸ் தூண்டல் ஏற்படாது. செக்ஸின்போது வலி ஏற்படும்.

எல்லை பிரச்னை

குழந்தைப்பருவ அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான எல்லைகளை பராமரிப்பதில் சிரமப்படுவார்கள். இது நெருக்கமான உறவில் அவர்களால் தங்களின் ஆசைகள் மற்றும் விருப்பங்கள் குறித்து விரிவாக உரையாட முடியாமல் போய்விடும்.

அதிர்ச்சியை மீண்டும் அனுபவித்தல்

நெருக்கமாக இருக்கும்போது, அவர்களுக்கு கடந்த கால அதிர்ச்சிகள் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்யும். இது மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், செக்ஸ்வல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடவிடாமல் தடுக்கிறது.

குழந்தைப்பருவ அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ந்திருப்பது எப்படி?

தெரபி

மன நல ஆலோசகர்களிடம் இவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். அவர்களின் குழந்தைப்பருவ அதிர்ச்சி குறித்து கூறி தேவையான ஆலோசனைகளை பெற முடியும். சிகிச்சையில் செக்ஸ் தெரபியும் இடம்பெறவேண்டும். தனிநபரின் பிரச்னைக்கு ஏற்றவாறு செக்ஸ்வல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆதரவு குழுக்கள்

குழந்தைப்பருவ அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட குழுவினருடன் சேர்ந்து இயங்குதல், அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது, இது ஒரு புரிதல் மற்றும் ஆதரவை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும்.

கல்வி மற்றும் உரையாடல்

அதிர்ச்சியின் பாதிப்பு குறித்து தெரிந்துகொள்வது, உரையாடலை வளர்த்தெடுப்பது நெருக்கமான உறவை தொடரவும், நம்பிக்கை மற்றும் புரிதலை ஏற்படுத்தவும் உதவும்.

அமைதிப்படுத்துதல்

உங்களை அமைதிப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் மனஅழுத்தம், பயம், பதற்றத்தை பராமரிக்க உதவும் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதுவும் செக்ஸ்வல் வாழ்க்கைக்கு ஒரு நேர்மறையான அணுகுமுறையை ஏற்படுத்தும்.

மருந்துகள்

சிலருக்கு மருந்துகள் தேவைப்படலாம். கடும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பதற்றத்துக்கு ஆளாளனவர்களுக்கு மருந்துகள் கட்டாயம் தேவைப்படுகிறது. வலிப்புக்கு எதிரான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் தேவையானபோது பயன்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கு பயனளிக்கிறது. இதன் மூலம் குழந்தைப்பருவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை அமையட்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்