தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : உறவில் விரிசலா? உடைந்தை ஒட்டவைக்கும் வழிகள் இதோ!

Relationship : உறவில் விரிசலா? உடைந்தை ஒட்டவைக்கும் வழிகள் இதோ!

Priyadarshini R HT Tamil
Nov 14, 2023 12:00 PM IST

Relationship : உறவில் விரிசலா? உடைந்த உறவை ஒட்டவைக்கும் வழிகள் இதோ. இவற்றை பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்வை வாழுங்கள்.

Relationship : உறவில் விரிசலா? உடைந்தை ஒட்டவைக்கும் வழிகள் இதோ!
Relationship : உறவில் விரிசலா? உடைந்தை ஒட்டவைக்கும் வழிகள் இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

திறந்த உரையாடல்

திறந்த மனதுடன் உரையாட வேண்டும். உரையாடல் நேர்மையானதாக இருக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த இருவருக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்க வேண்டும். அச்சமும், எவ்வித முன்முடிவும் இன்றி அணுகவேண்டும்.

நன்றாக கவனிக்கவேண்டும்

ஒவ்வொருவரின் கோணத்தையும் புரிந்துகொள்ள ஒருவரின் கருத்தை நன்றாக கவனிக்க வேண்டும். நீங்கள் அவர்களின் கோணத்தை புரிந்துகொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்களிடன் என்னவென்று தெளிவாக கூறவேண்டும்.

அனுதாபம்

உங்களை அடுத்தவர்கள் இடத்தில் பொருத்தி பாருங்கள். அப்போது அவர்களின் வலி உங்களுக்கு புரியும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். நீங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவிட்டாலும், அவர்களின் உணர்வுகளை மதிப்பது அவசியம்.

மன்னிப்பு கேட்பது மற்றும் மன்னிப்பது

நீங்கள் தவறு செய்துவிட்டால் கட்டாயம் மன்னிப்பு கேளுங்கள். அதேபோல் மன்னிக்கவும் தயங்காதீர்கள். வெறுப்பை வளர்த்து வந்தால், அது நீங்கள் சமாதானம் ஆவதை தடுக்கும். எனவே மன்னிப்பதும், மன்னிப்பு கேட்பதும் உறவில் மிகவும் அவசியம்.

எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்

உங்கள் உறவில் எல்லைகளையும், எதிர்பார்ப்புகளையும் தெளிவாக வகுத்துவிடுங்கள். இது உங்களின் எதிர்கால புரிதலின்மைகளையும், சண்டைகளையும் தவிர்க்க உதவும். எனவே எல்லையை வகுப்பது தேவையற்ற பிரச்னைகளை தீர்க்க உதவும்.

தேவைப்பட்டால் நிபுணரை அணுகலாம்

தேவைப்பட்டால் உளவியல் நிபுணர்களை தம்பதிகள் அணுகலாம். பயிற்சி பெற்ற நிபுணர் உங்களுக்கு வழிகாட்ட முடியும். அவரால் நல்ல உரையாடலை நடத்தி, உங்களின் உறவு மேம்பட வழிவகுக்க முடியும்.

தேவைப்படும் மாற்றங்களை செய்யுங்கள்

உங்களின் செயல்கள் மற்றும் நடத்தைகளை கவனியுங்கள். அவற்றில் மாற்றம் ஏற்பட்டால், அதை கட்டாயம் செய்யுங்கள். எந்த இடத்தில் நீங்கள் உங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அங்கு கட்டாயம் தேவையாக மாற்றத்தை செய்துவிடுங்கள். தேவையான நேர்மறையான மாற்றங்களை செய்ய எப்போதும் தயங்காதீர்கள்.

தரமான நேரம்

உங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதில் இருவரும் தரமான நேரத்தை கட்டாயம் செலவிடுங்கள். உங்களுக்கு இடையே ஏற்பட்ட நல்ல தருணங்களை மீண்டும், மீண்டும் நினைத்து பாருங்கள். அது உங்களுக்கு இடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பை உண்டாக்கும்.

திட்டமிடுங்கள்

உங்கள் இருவரின் உறவு பலப்பட தேவையானவற்றை செய்வதற்கு திட்டமிட்டு, இலக்கு நிர்ணயித்து, அதை செய்து முடியுங்கள். ஒன்றாக இணைந்து அதை நிறைவேற்றும் வேலையை செய்யுங்கள். இது நீங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் ஒரு நிலையை உருவாக்கி, உங்களிடையே இணக்கம் ஏற்பட உதவும்.

பொறுமை

உங்கள் உறவை மீண்டும் புதுப்பிக்க நேரம் தேவைப்படுகிறது. எனவே பொறுமையாக இருங்கள். உங்கள் உறவு நன்முறையில் மீண்டும் வளர்ந்து வர கட்டாயம் நீண்ட நாட்கள் எடுக்கும் என்பதே உண்மை. எனவே உடனடி பதில்களை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்