Relationship : பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடாதவைகள் என்ன தெரியுமா? அப்புறம் வேலைக்கே ஆபத்துதான்!
Relationship : பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடாதவைகள் என்னவென்று தெரிந்துகொண்டு கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் வேலைக்கே ஆபத்துதான்.
பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடாது தவறுகள் இவைதான்.
உங்கள் பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்
மற்றவர்கள் கண்மூடித்தனமாக நம்புவது முதல் அதிக வேலைகளை இழுத்துப்போட்டுக்கொள்வது வரை பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
பல தவறுகளை பணியிடங்களில் அனைவரும் செய்வார்கள். இதனால் உங்களுக்கு பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும். எனவே பணியிடங்களில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடன் பணிபுரிகவர்களை நம்புங்கள்
உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மற்றம் குழவில் இணைந்து செயல்படுபவர்களுடன் நீங்கள் நல்ல உறவை கட்டாயம் பேண வேண்டும். ஆனால், அவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. அவர்களை நம்புவதில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
தனிப்பட்ட விஷயங்களை பகிர்வது
உங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையை, அதில் உள்ள சிக்கல்களை பகிர்ந்துகொள்ளக்கூடாது. பணி தொடர்பான விஷயங்களை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள். சிறந்த பணியாளராக விளங்கவேண்டுமெனில் எல்லைகளை கடக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்தாதீர்கள்.
கிசுகிசுக்கள்
அலுவலக கிசுகிசுக்கள் நம்பிக்கை மற்றும் உறவுகளுக்குள் நஞ்ஜை விதைக்கும். குறிப்பாக உடன் பணிபுரிபவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும். இது குழுவினருடன் மனக்கசப்பை ஏற்படுத்தி, குழு வேலையை பாதிக்கும். ஒற்றுமை மற்றும் உற்பத்தி திறனை பாதிக்கும்.
மற்றவர்களை குறை சொல்லக்கூடாது
உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களை குறை கூறாதீர்கள். அதுதான் உங்களுக்கு ஞானத்தை பெற்றுத்தரும். உங்களுக்கு மரியாதையை கொடுக்கும். உங்களின் மீது நம்பகத்ன்மையை ஏற்படுத்தும். உங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் மரியாதையுடன் நடத்துவார்கள்.
அதிக வேலைகளை ஏற்காகதீர்கள்
நீங்கள் உற்சாகத்துடன் செயல்படவேண்டும். குறிப்பாக பணிகளில், ஊக்கம் அவசியம். அர்ப்பணிப்புடன் பணிசெய்வது மிகவும் முக்கியம். ஆனால் அதிக பொறுப்புக்களை ஏற்காதீர்கள். அப்படி ஏற்கும்போது, அது உங்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். அது உங்களின் வேலையின் தரத்தை பாதிக்கும். எனவே அதிக சுமைகளை ஏற்றிக்கொள்ளாதீர்கள். அது உங்களுக்குத்தான் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மாற்றத்தை தடுக்காதீர்கள்
மாற்றத்தை வரவேற்பவராகவும், எவ்வித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்பவராகவும் இருக்கவேண்டும். இது உங்களை நிறுவனத்தின் அசையாத சொத்தாக கருதவைக்கும். உங்கள் குழுவினரும் உங்களை நம்புவார்கள். உங்கள் வேலைக்கு நீங்கள் செய்யவேண்டியவைகளை செய்வதுடன், உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலும் பங்களியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு நல்லது.
போட்டி
பணியிடத்தில் போட்டி என்பது மிகவும் சிறப்பான ஒன்று. இது வளர்ச்சி மற்றும் ஊக்கத்தை உங்களுக்கு அளிக்கும். எனினும், அதிக போட்டிகள் தேவையற்ற சண்டைகளை நிறுவனத்தில் ஏற்படுத்தும். மேலும் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே நீங்கள் போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் அது தனி ஒருவரை மட்டும் பாதிக்காது. ஆனால், ஒட்டுமொத்த குழுவின் உற்பத்தி திறனையும் பாதிக்கும். பணியிட சூழலையே மாற்றும். பணியில் மனஅழுத்தத்தை அதிகரிக்கும்.
பிரச்னைகளில் ஈடுபடாதீர்கள்
நேர்மறையான பணிச்சூழலை உருவாக்க வேண்டும். பணியில் உற்பத்தித்திறன் மிகவும் அவசியம். எனவே அதை உருவாக்க பணிச்சூழல் அமைதியாக இருக்கவேண்டும்.
மேலும் தீர்க்கப்படாத பிரச்னைகள் குழுவில் மற்றவர்களுடன் நீங்கள் தொடர்புகொள்வதை தவிர்க்கும். இது இடையூறுகளுக்கு வழிவகுக்கும். தாமத்தை ஏற்படுத்தும். மேலும், பணியின் தரத்தை பாதிக்கும். எனவே உடன் பணிபுரிபவர்களுடன் ஏற்படும் பிரச்னைகளை பேசி அவ்வப்போதே தீர்த்துக்கொள்வது நல்லது.
டாபிக்ஸ்