Professional Behaviour : வேலைசெய்யும் இடத்தில் இதையெல்லாம் செஞ்சா, வருஷம் ஒரு ப்ரமோஷன் தான்!
Professional Behaviour : வேலைசெய்யும் இடத்தில் இதையெல்லாம் செஞ்சா, வருஷம் ஒரு ப்ரமோஷன் தான்!
நிலையான பணிச்சூழல்
தொடர்ந்து காலக்கெடுக்களை சந்திப்பது, சரியாக தொடர்புகொள்வது, தன்னம்பிக்கையுடன் மரியாதை கொடுப்பது பாதுகாப்பான மற்றும் நிலையான ஒரு சூழலை உருவாக்குவதற்கு சிறந்தது.
நிறுவனங்களின் கொள்கைகளை கடைபிடிப்பது
உங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் என்னவென்பதையும் புரிந்துகொள்ளுங்கள். எந்த விதிமுறை மீறல்களையும் தவிர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
ப்ரொஃபஷனலிசத்தை கடைபிடியுங்கள்
அலுவலகத்தில் நீங்கள் இருக்கும் நேரத்தில் ப்ரொஃபஷனலாக இருங்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்களுடன் பேசும்போதும், உங்களின் அதிகாரிகளிடம் பேசும்போதும், நீங்கள் நல்ல நடத்தைகளை பின்பற்ற வேண்டும். உங்கள் வாடிக்கையாளரிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்.
காலக்கெடுக்களை சந்தியுங்கள்
உங்களின் வேலைகளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பாருங்கள். உங்களின் நேரத்தை திறம்பட கையாண்டு, நம்பகத்தன்மை மற்றும் சார்பின்மையை உருவாக்குங்கள்.
திறமையாக தொடர்புகொள்ளுங்கள்
உங்களை தொடர்புகொள்ளும் வழிகளை எப்போது திறந்து வைத்திருங்கள். வெளிப்படையாகவே அவை எப்போதும் இருக்கட்டும். சரியான நேரத்தில் இமெயில்களுக்கும், அழைப்புகளுக்கும், குறுந்தகவல்களுக்கும் பதில் கொடுங்கள். தேவைப்படும்போது தெளிவான விளக்கம் பெறுங்கள்.
ரகசியங்களுக்கு மரியாதை கொடுங்கள்
நிறுவனம் குறித்த மிகவும் முக்கிய விஷயங்களிளெல்லாம் ரகசியங்களை கடைபிடியுங்கள். அப்போதுதான் நிறுவனத்தின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.
பிரச்னைகளை ராஜதந்திரங்களுடன் கையாளுங்கள்
பிரச்னைகள் மற்றும் கருத்துவேறுபாடுகளை நல்ல முறையில் கடைபிடியுங்கள். அதற்கான பதில்களை திறந்த மனதுடன் கேட்டுப்பெறுங்கள். சமரசம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
பொறுப்பேற்பது
உங்கள் பொறுப்புகள் மற்றும் செயல்களுக்கு உரிமை எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது தவறுகளை ஒற்றுக்கொள்ளுங்கள். தீர்வுகளை நோக்கி பணிசெய்யுங்கள்.
முன்னெடுப்புகள் மேற்கொள்ளுங்கள்
வாய்ப்புக்களை சுறுசுறுப்புடன் தேடித் தேர்ந்தெடுத்து, நீங்கள் முன்னெடுத்துச் செல்வதை காட்டுங்கள். கற்றல், பங்களிப்பது மற்றும் முன்னேறுவது என்று நிறுவனத்தில் உங்களின் பங்கை காட்டிக்கொண்டே இருங்கள்.
பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடியுங்கள்
பணியிடத்தில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தேவையான பொருட்களை சரியாக பயன்படுத்துவது மற்றும் ஏதேனும் பிழை நேர்ந்தால் அதுகுறித்து உடனடியாக எடுத்துக்கூறுவது என பாதுகாப்பு நடவடிக்கைகளை முடிறயாக கையாளுங்கள்.
புதிய தகவல்களை தெரிந்துகொண்டிருங்கள்
நீங்கள் சார்ந்த துறையின் புதிய ட்ரெண்டுகளை தெரிந்துகொள்ளுங்கள். நிறுவனங்கள் குறித்த விவரம், போதிய பயிற்சி என உங்களின் திறன் மற்றும் அறிவை வளர்த்துக்கொண்டிருங்கள். தனிப்பட்ட மற்றும் ப்ரொபஃஷனல் வளர்ச்சி குறித்து உத்வேகத்துடன் செயல்படுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்