பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரா? அவர்கள் 5 வயதாகும் முன் நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது இதுதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரா? அவர்கள் 5 வயதாகும் முன் நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது இதுதான்!

பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரா? அவர்கள் 5 வயதாகும் முன் நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது இதுதான்!

Priyadarshini R HT Tamil
Oct 08, 2024 01:00 PM IST

பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரா நீங்கள் எனில், அவர்கள் 5 வயதாகும் முன் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றப்போகும் அடிப்படை அறிவு இதுதான.

பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரா? அவர்கள் 5 வயதாகும் முன் நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது இதுதான்!
பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரா? அவர்கள் 5 வயதாகும் முன் நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது இதுதான்!

மரியாதை மற்றும் அடிப்படை நடத்தை

உங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்று, அமைதியாக இருப்பது மற்றும் மரியாதையுடன் நடந்து கொள்வது ஆகும். அவர்களுக்கு தயவு செய்து, நன்றி, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், மன்னிப்பு ஆகிய வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்துவிடவேண்டும். அது அவர்களின் சமூகத்திறன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

அவர்களுக்கு அடிப்படை மரியாதையைக் கற்றுக்கொடுப்பது அவர்கள் பெரியவர்களுடனும், அவர்களின் வயதை ஒத்தவர்களுடனும் சேர்ந்து அவர்கள் பயணிக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு அனுதாபம் மற்றும் அன்பு ஆகியவற்றை கற்றுக்கொடுத்துவிடுங்கள். அது அவர்களுக்கு மிகவும் உதவும்.

பகிர்ந்துகொடுப்பதன் முக்கியத்துவம்

பகிர்ந்துகொள்வது முக்கியமான ஒரு சமூகத்திறன் ஆகும். இது உங்கள் குழந்தைகளுக்கு நட்பை பகிரவும், உறவுகளை பகிரவும், சமூக சூழல்களைக் கடக்கவும் உதவும். குழந்தைகளுக்கு பொம்மைகள், ஸ்னான்க்ஸ்கள் மற்றும் மற்ற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்துங்கள்.

இதனால் அவர்களுக்கு ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கை புரியும். அவர்களுக்கு நேர்மையை இது கற்றுத்தரும். அவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே பகிரும் குணம் வளரும். எனவே உங்கள் குழந்தைகளிடம் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை விதையுங்கள். அவர்கள் பகிர்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை புரிந்துகொள்ள உதவும்.

உணர்வுகளை வெளிப்படுத்துவது

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை கண்டுபிடித், வெளிப்படுத்த உதவுவது அவர்களின் உணர்வு ரீதியான அறிவுக்கு மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் குழந்தைகளிடம் மகிழ்ச்சி, சோகம், கோவம், விரக்தி என அனைத்தையும் வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள். இதனால் அவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள்.

எதையும் அவர்கள் அடக்கிக்கொள்ளமாட்டார்கள். அவர்களின் உணர்வுகள் குறித்து உங்களிடம் பேசவேண்டும். கோவம் வந்தால், அது அவர்களுக்கு எரிச்சலாக உள்ளது என்று உங்களிடம் கூற வேண்டும் மாறாக கத்தக்கூடாது என்பதை கூறுங்கள். இது அவர்கள் உணர்வு ரீதியான மீண்டு எழ உதவும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

அடிப்படை சுகாதார பழக்கங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே அடிப்படை சுகாதார பழக்கங்களை கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால் அது நல்லது. அவர்களுக்கு கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்கவேண்டும். குறிப்பாக சாப்பிடும் முன்னரும், பின்னரும் ஏன் கை கழுவவேண்டும் என்று கூறவேண்டும். பாத்ரூம் சென்றுவந்த பின்னர் கை கழுவுவது ஏன் என்று கற்றுக்கொடுங்கள். வெளியில் விளையாடிவிட்டு வந்தால் கை-கால்களை கழுவ கற்றுக்கொடுங்கள்.

அவர்களின் பற்களை நன்றாக துலக்கக் கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு தினமும் குளிக்க வேண்டியது, தனிப்பட்ட சுத்தம், தலைக்கு எண்ணெய் வைத்து தவையை சீவிக்கொள்ளவும் கற்றுக்கொடுங்கள். இந்த அடிப்படை நல்ல பழக்கங்கள் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவும். எனவே சிறு வயதிலேயே இவற்றை கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

வழிமுறைகளை பின்பற்ற கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு வழிமுறைகள் கூறப்படும்போது, அதை எவ்வாறு பின்பற்றவேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். இது அவர்களுக்கு பள்ளியில் சென்று படிக்கவும், சமூகத்தில் பழகவும் உதவும். அவர்களுக்கு எளிய டாஸ்குகளை கொடுங்கள். அதாவது பொம்மைகளை அடுக்கி வைப்பது, அவர்களின் டேபிளை சுத்தம் செய்து கொள்வது, என அவர்களுக்கு கற்றுக்கொடுத்துவிட்டால், அது அவர்களை முழுமையாக்க உதவும். இது அவர்கள் வளரவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் உதவும். அவர்கள் விதிகளையும் நடைமுறைகளையும் கற்றுக்காள்ள உதவும்.

பிரச்னைகளை தீர்க்கும் திறன்

உங்கள் குழந்தைகளை சிறு வயதிலேயே பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்பவர்களாக வளர்த்துவிடுங்கள். அது அவர்களுக்கு கிரிட்டிக்கலாக சிந்திக்கும் திறனை வளர்க்க உதவும். உங்கள் குழந்தைகள் முடிவு எடுக்கவும், சிறிய பிரச்னைகளை சரிசெய்யவும் அனுமதியுங்கள்.

அவர்களாகவே அவற்றை செய்யும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். அவர்களின் உடைகளை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் பசில்கள் விளையாட வேண்டும். அவர்களுக்கு இது சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுத்தரும். அவர்கள் பொறுமையுடன், முயற்சி எடுத்து பிரச்னைகளில் இருந்து வெளியேற உதவும்.

நேரம்

5 வயதிலேயே உங்கள் குழந்தைகளுக்கு நேரத்தின் அருமையை கற்றுக்கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு அதன் அருமை புரியும். அவர்களுக்கு நேரம், நிமிடம், நெபடி என பிரித்து அவர்களின் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு மதிய உணவுக்குபின்னர், உறங்கச் செல்லும் முன், 5 நிமிடத்தில் வருகிறேன் போன்ற வார்த்தைகளைக் கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு இது நேரத்தின் அருமையையும், அதை வீணாக்கக்கூடாது என்பதன் அவசியத்தையும் உணர்த்தும்.

கற்றல் மற்றும் ஆர்வம்

உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வத்தை வளர்த்து எடுப்பது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவும். அவர்களுக்கு கேள்விகள் கேட்க கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு பதில்களைக் கூறவும் சொல்லிக்கொடுங்கள். அவர்களை சில ஆய்வுகளை செய்ய வையுங்கள். அவர்களுக்கு புத்தகம் வாசிக்க, இயற்கையில் சில மணி நேரங்கள் செலவிட என கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு கிரயேட்டிவான விளையாட்டுகளை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமான அறிவை வளர்க்க வழிவகுத்துக்கொடுங்கள். அது அவர்களுக்கு நல்ல மேடையை அமைத்துத்தரும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.