டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? கடின காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? கடின காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எப்படி?

டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? கடின காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Nov 04, 2024 11:43 AM IST

டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? கடின காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? கடின காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எப்படி?
டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? கடின காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எப்படி?

கவனித்தல்

டீன் ஏஜ் பருவத்தில் நீங்கள் குழந்தைகளை தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் மீது முழுகவனமும் செலுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர்கள் பேசும்போது உற்று கவனிக்கவேண்டும். உங்களுக்கு இடையில் ஏதேனும் கேள்விகள் தோன்றினாலும், நீங்கள் காத்திருக்கவேண்டும். உடனடியாக முடிவுகளை எடுக்கக்கூடாது. மாறாக, நீங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் மீது அனுதாபம் காட்டவேண்டும்.

அவர்களை விமர்சிக்காத சூழலை உருவாக்குங்கள்

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் எந்த விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்குங்கள். அவர்கள் அச்சமின்றியும், தண்டனை கிடைக்கும் என்ற பயமின்றியும் உங்களிடம் எதையும் பகிரவேண்டும். இது உங்களிடையே திறந்த உரையாடலை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு உங்கள் மீது நிறைய நம்பிக்கை ஏற்படும்.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்

அவர்கள் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது. அவர்களின் உணர்வுகளை நீங்கள் முழுவதும் புரிந்துகொள்ளவில்லையென்றாலும், அதை ஏற்கவில்லையென்றாலும் அதற்கு மதிப்பு கொடுங்கள். அவர்களிடம் பேசும்போது, இது உனக்கு மிகவும் கடினமான ஒன்று, நீங்கள் உண்மையிலேயே உடைந்து காணப்படுகிறீர்கள் என கூறும்போது, அவர்கள் கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

தரமான நேரத்தை ஒன்றாக செலவிடுங்கள்

நீங்கள் இருவரும் மகிழ்ந்திருக்கும் நடவடிக்கைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பிடித்த திரைப்படம், டிவி நிகழ்ச்சி, சமையல் அல்லது ஹாபி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கடின காலங்களில் மட்டும் நீங்கள் அவர்களின் துணை அல்ல, நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கும் தருணங்களில் நீங்கள் மகிழ்ந்திருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள்

உங்கள் டீன்ஏஜ் குழந்தையின் வாழ்வில் நீங்கள் இணைந்திருக்கவேண்டியது அவசியம்தான். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் இருந்து தகவல்களை பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. மாறாக, அவர்களுக்கு நம்பிக்கையைத் தரும் வகையில் அவர்களை உரையாடலுக்கு அழைக்க வேண்டும்.

அனுதாபத்துடனான எல்லைகள்

டீன்ஏஜ் குழந்தைகளுக்கு சில விதிகள் தேவை. ஆனால் அவர்களுக்கு நீங்கள் விதிக்கும் விதிகளுக்கான காரணங்களை விளக்கிவிடவேண்டும். அவர்களுக்கு எல்லைகள் ஏன் விதிக்கப்படுகிறது என்ற காரணமும் அவர்களுக்கு விளக்கப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் அதை மதிப்பார்கள். அவர்களுக்கு ஏன் விதிகள் என்பது புரிந்துவிட்டால், அவர்கள் அதை மதிப்பார்கள். அவர்களின் எல்லைகளுக்குள் இருந்துகொள்வார்கள்.

பொறுமை

அவர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள நேரம் எடுக்கும். ஆனாலும், உடனடி மாற்றங்களை எதிர்பார்க்காதீர்கள். வளர்ச்சி என்பது பொறுமையாக நடக்கும் ஒன்றாக இருக்கும். தொடர் முயற்சிதான் சாவி, நீங்கள் சரியான பாதையில் இல்லையென்றால் கூட மாற்றம் ஏற்பட பொறுமை மிகவும் அவசியம்.

தேவைப்பட்டால் நிபுணர்களின் அறிவுரை

உங்கள் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், பதற்றம் மற்றும் மற்ற மன ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட்டால், நீங்கள் நிபுணரை அணுகுவது கட்டாயம் எனத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு சரியான வழிகாட்டுதல்களைக் கொடுப்பார்கள். அவர்கள் உங்களுடன் உங்கள் குழந்தைகள் மீண்டும் இணைந்து மகிழ்ந்திருக்க வழிவகை செய்வார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.