தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : அன்பு பெற்றோரே! குழந்தைகள் உங்களிடம் இருந்து அடிக்கடி கேட்க விரும்புவது இதைத்தான்!

Parenting Tips : அன்பு பெற்றோரே! குழந்தைகள் உங்களிடம் இருந்து அடிக்கடி கேட்க விரும்புவது இதைத்தான்!

Priyadarshini R HT Tamil
Apr 27, 2024 03:30 PM IST

Parenting Tips : குழந்தைகள் உங்கள் பெற்றோரிடம் இருந்து அதிகம் கேட்க விரும்புவது என்ன?

Parenting Tips : அன்பு பெற்றோரே! குழந்தைகள் உங்களிடம் இருந்து அடிக்கடி கேட்க விரும்புவது இதைத்தான்!
Parenting Tips : அன்பு பெற்றோரே! குழந்தைகள் உங்களிடம் இருந்து அடிக்கடி கேட்க விரும்புவது இதைத்தான்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன கூறவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். அதிலும், அவர்கள் உங்களிடம் இருந்து என்ன கேட்க விரும்புகிறார்கள் என்பதும் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து கேட்க விரும்புவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீ நீயாக இருப்பதுதான் எப்போதும் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது

குழந்தைகளை, அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதும், அன்பு காட்டுவதும் அவர் எதிர்பார்ப்பது. அவர்கள் தனித்தன்மையானவர்கள் மற்றும் சிறப்பானவர்கள் என்பதை நீங்கள் மீண்டும் உறுதியாகக் கூறவேண்டும். அவர்கள் வேறு யார்போலவும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.

அவர்கள் தங்களின் தனித்தன்மையை அறிந்திருப்பதுடன், அவ்வாறு நடந்துகொள்ள ஊக்குவிக்கவேண்டும். குழந்தைகள் இதை கேட்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வும், தாங்களாக இருப்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

தவறுகள் செய்வது பரவாயில்லை

தவறுகள்தான் கற்றலின் அங்கம். தவறுகள் மூலம் தான் வளர்ச்சி சாத்தியம். எனவே உங்கள் குழந்தைகள் தவறு செய்தால், அது பரவாயில்லை என்றும், யாரும் மிகச்சரியானவர்கள் கிடையாது என்றும் கூறிவிடுங்கள். ஆனால் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதை மட்டும் கட்டாயம் வலியுறுத்துங்கள்.

தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் பலமானவர்களாக முடியும். அவர்களின் தவறுகளை ஏற்பதன் மூலம், அவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சுற்றியுள்ள உலகையும் அவர்கள் காண்கிறார்கள்.

உனது கருத்துக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் உண்டு

குழந்தைகளின் கருத்துக்களையும் கேட்வேண்டும். குழந்தைகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அவர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களின் யோசனைகளை அவர்கள் பகிர்ந்துகொள்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

அவர்களின் யோசனையும், உங்களின் யோசனையும் மாறுபட்டால், அவர்களின் கருத்துக்களை காதுகொடுத்து கேளுங்கள். அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். இதன் மூலம் அவர்கள் கிரிட்டிக்கலாக யோசிக்கிறார்கள். குடும்பத்தினருடன் ஒன்றிய உணர்வைப் பெறுகிறார்கள்.

கோவப்படுபவராக இருப்பது தவறல்ல

கோவம் என்பது ஒரு இயல்பான குணம் மற்றும் மனிதனின் அங்கம் என்று குழந்தைகளுக்கு வலியுறுத்துங்கள். எனவே கோவப்படுவது பரவாயில்லை. ஆனால் மனிதன் தனது உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் காட்டவேண்டும்.

அவர்களின் கோவத்தை சரியான முறையில் கையாள கற்றுக்கொடுக்கவேண்டும். கோவம் வரும்போது, ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, அவர்களின் உணர்வுகள் குறித்து பேசுவது மற்றும் அவர்களின் உணர்வுகளை நேர்மறை ஆற்றலாக எவ்வாறு மாற்றுவது என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.

வித்யாசமாக சிந்திப்பது நல்லது

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களின் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் கோணங்கள் என அனைத்தும் வேறுபடும். எனவே உங்கள் குழந்தைகளை அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவியுங்கள். அவர்களின் கருத்துக்கள் வேறுபட்டால், அதை அங்கீகரியுங்கள்.

அவர்களுக்கு வேற்றுமைதான் இந்த உலகை ஆச்சர்யங்கள் நிறைந்ததாக மாற்றும். அந்த வித்யாசங்களைக் கூறி, குழந்தைகள், வேற்றுமையை பாராட்டவும், அடுத்தவர்கள் மீது அனுதாபத்தை வளர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொடுங்கள்.

உங்களின் உள்ளார்ந்த குரலை மறுக்காதீர்கள்

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உள்ளுணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். அவர்களின் உட்குரலை கேட்பது அவர்களுக்கு நல்லது. அவர்களுக்கு சரி என படாதது குறித்து அவர்கள் அவர்கள் பேசவேண்டியது முக்கியம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.

அவர்களின் உள்ளுணர்வுகளை பின்பற்ற கற்றுக்கொடுங்கள். அது கூட்டத்தில் இருந்து தனித்து செல்வதாக இருந்தாலும் சரிதான். அவர்களின் உள்ளுணர்வுகளை மதிப்பதன் மூலம், குழந்தைகள் அறிவார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்