Parenting Tips : அன்பு பெற்றோரே! குழந்தைகள் உங்களிடம் இருந்து அடிக்கடி கேட்க விரும்புவது இதைத்தான்!
Parenting Tips : குழந்தைகள் உங்கள் பெற்றோரிடம் இருந்து அதிகம் கேட்க விரும்புவது என்ன?

பேரன்டிங் உண்மையில் சவால்கள் நிறைந்த ஒரு பயணம்தான். அதில் வளர்ச்சி, பாடம், மகிழ்ச்சி, கண்ணீர் என அனைத்தும் நிறைந்திருக்கும். இது இருதரப்புக்கும் அதாவது பெற்றோர் மற்றும் குழந்தைகள் என இருதரப்புக்கும் அப்படித்தான் இருக்கும்.
ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன கூறவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். அதிலும், அவர்கள் உங்களிடம் இருந்து என்ன கேட்க விரும்புகிறார்கள் என்பதும் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து கேட்க விரும்புவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீ நீயாக இருப்பதுதான் எப்போதும் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது
குழந்தைகளை, அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதும், அன்பு காட்டுவதும் அவர் எதிர்பார்ப்பது. அவர்கள் தனித்தன்மையானவர்கள் மற்றும் சிறப்பானவர்கள் என்பதை நீங்கள் மீண்டும் உறுதியாகக் கூறவேண்டும். அவர்கள் வேறு யார்போலவும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.