Parenting Tips : எந்ரேமும் குடும்பத்துக்காக உழைக்கும் பிஸியான அம்மாவா நீங்கள்? உங்களையும் கொஞ்சம் பாத்துக்கங்க!-parenting tips are you a busy mom working to provide for your family take care of yourself - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : எந்ரேமும் குடும்பத்துக்காக உழைக்கும் பிஸியான அம்மாவா நீங்கள்? உங்களையும் கொஞ்சம் பாத்துக்கங்க!

Parenting Tips : எந்ரேமும் குடும்பத்துக்காக உழைக்கும் பிஸியான அம்மாவா நீங்கள்? உங்களையும் கொஞ்சம் பாத்துக்கங்க!

Priyadarshini R HT Tamil
Sep 24, 2024 03:34 PM IST

Parenting Tips : எந்ரேமும் குடும்பத்துக்காக உழைக்கும் பிஸியான அம்மாவா நீங்கள்? உங்களையும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்ன?

Parenting Tips : எந்ரேமும் குடும்பத்துக்காக உழைக்கும் பிஸியான அம்மாவா நீங்கள்? உங்களையும் கொஞ்சம் பாத்துக்கங்க!
Parenting Tips : எந்ரேமும் குடும்பத்துக்காக உழைக்கும் பிஸியான அம்மாவா நீங்கள்? உங்களையும் கொஞ்சம் பாத்துக்கங்க!

அவர்களுக்கு கூடுதல் உறக்கம்

தினமும் அவர்கள் அதிகாலையில் எழுந்துகொள்ள வேண்டும். அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும். இது மிகவும் கடுமையான சவால் நிறைந்த ஒன்றுதான். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் முடிக்கவேண்டும். எனவே அம்மாக்களுக்கு எப்போதும் ஒரு ஆசை இருக்கும். அவர்கள் சிறிது கூடுதல் நேரம் உறங்கலாம் என்று, ஆனால் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் வேலைகளால் அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு தேவையான கூடுதல் உறக்கம் அவர்களுக்கு கிடைக்கட்டும்.

அவர்களுக்கான தனியான நேரம்

அவர்களின் கணவர் மற்றும் குழந்தைகள் வெளியில் சென்றுவிட்டால், அம்மாக்கள் தங்களின் அமைதியான நேரத்தை கொண்டாட விரும்புவார்கள். சில நேரத்தில் அமைதியாகவும் இருக்க ஆசைப்படுவார்கள். இது அவர்களுக்கு மூச்சுவிடக் கிடைக்கும் அரிதான தருணம். அவர்களுக்கு மிகவம் தேவையான மீ-டைமும் ஆகும்.

சமைப்பது அல்லது ஆர்டர் போடுவது

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு பிடித்தது என்னவென்று கேட்டு கேட்டு சமைப்பவர்களாக அம்மாக்கள் இருப்பார்கள். சில நேரங்களில் அம்மாக்கள் சமைப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் ஆர்டர் போடுவார்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் எந்த நேரமும் தனித்தனியாக கவனித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் விரும்பியதை செய்யலாம்.

விழாக்களின்போது கடும் வேலை

விழாக்கள் நமக்கு மகிழ்வைக் கொண்டு வருபவைதான். ஆனால், அம்மாக்களுக்கு அவை கூடுதல் பொறுப்பு மற்றும் மனஅழுத்தம்தான். அவர்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். சமைக்கவேண்டும். அவர்கள் விழாக்களுக்காக செய்யும் முயற்சிகள் கடுமையானதாக இருக்கும்.

வீட்டுப்பாடங்கள்

குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்களை கற்றுக்கொடுப்பதில் விரக்தி ஏற்படும். குறிப்பாக அவர்களுக்கு பள்ளியில் பிடிக்காத பாடம் என்றால் மிகவும் கஷ்டப்படுவார்கள். எனவே அவர்களுக்கு உதவவேண்டும். அவர்களுக்கு புரியாதவற்றை விளங்க வைக்கவேண்டும்.

சமையல்

அம்மாக்களுக்கு சமையலில் எப்போதும் ஈடுபாடு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் அவர்கள் சமைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அவர்கள் அதை தினமும் செய்யவேண்டும். அவர்கள் எப்போதும் மகிழ்வுடன் சமைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு மகிழ்வு தரும் ஒன்றாக சமையலும் எப்போதும் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.

வீட்டுவேலைகள்

வீட்டுவேலைகள் அனைத்தும் அவர்களின் பொறுப்பு கிடையாது. பல அம்மாக்கள், வீட்டு வேலைகள் மொத்தமும் அவர்களின் பொறுப்பு என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது கிடையாது. குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை பகிர்ந்து செய்யவேண்டும். வீட்டில் வசிக்கும் அனைவரின் பொறுப்புதான் வீட்டு வேலைகள்.

அம்மாக்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது

இது பொதுவான உணர்வுதான். ஆனால் இது நபருக்கு நபர் மாறுபடும். எனவே சில விஷயங்களை பகிர திறந்த உரையாடல் வேண்டும். குடும்பத்தினரிடம் இருந்து நல்ல ஆதரவும் வேண்டும். அனைவரையும்போல் அம்மாக்களுக்கு புரிதல், பாராட்டுக்கள் என அனைத்தும் அன்றாட வாழ்க்கையில் தேவை.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.