Teeth Care: பாதுகாப்பான பளிச் பற்கள் வேண்டுமா? இதோ உங்களுக்கு தேவையான டிப்ஸ்கள்!
Teeth Care:தமிழில் பல் போனால் சொல் போகும் என்ற கூற்று ஒன்று இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் நாம் பேசுவதற்கு முக்கிய ஆதாரமாக பற்கள் உள்ளன. இந்த பற்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். பற்களை பாதுக்கப்பதால் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
பல் நமது உடலில் முக்கியமான உறுப்பு ஆகும். நமது செரிமான மண்டலத்தில் முதல் உறுப்பாகவும் இந்த பற்கள் இருந்து வருகின்றன. தமிழில் ‘பல் போனால் சொல் போகும்’ என்ற கூற்று ஒன்று இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் நாம் பேசுவதற்கு முக்கிய ஆதாரமாக பற்கள் உள்ளன. இந்த பற்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். பற்களை பாதுக்கப்பதால் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இத்தகைய பற்களில் வரக்கூடிய முக்கிய பிரச்சனை என்றால் பற் சொத்தை (Cavities) எனும் பாதிப்பு ஆகும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை வரும் பொதுவான பாதிப்பு ஆகும். இவை பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவு துணுக்குகள் பற்களில் தங்கி விடுவதால் ஏற்படுகின்றன.
சக்கரை பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் எனாமலை அழித்து பற்களை சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தை ஆகின்றன. இதன் முதல் அறிகுறி, பற்களில் கூச்சம் உண்டாகும். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும் பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும் போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.
பற்சொத்தையை தடுக்க பின்பற்ற வேண்டியவை
காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும். மேல் பற்களைக் கீழ்நோக்கியும், கீழ்ப் பற்களை மேல் நோக்கியும் துலக்க வேண்டும். டங் கிளினரால் நாக்கை சுத்தப்படுத்த வேண்டும். பல் துலக்க பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. பல் துலக்க சாஃப்ட், மீடியம் ரக பிரஷ்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு 5 வயது வரை பெற்றவர்கள் கைகளால் பற்களை துலக்கி விட வேண்டும். தினமும் ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
வைட்டமின் – சி, வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும். காபி தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்