தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Cashew Cutlet : பன்னீர் முந்திரி கட்லெட்! குழந்தைகளை குஷிப்படுத்தும் ஸ்னாக்ஸ்!

Paneer Cashew cutlet : பன்னீர் முந்திரி கட்லெட்! குழந்தைகளை குஷிப்படுத்தும் ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Oct 18, 2023 11:00 AM IST

Paneer Cashew cutlet : பன்னீர் முந்திரி கட்லெட். குழந்தைகளை குஷிப்படுத்தும் ஸ்னாக்ஸ்.

Paneer Cashew cutlet : பன்னீர் முந்திரி கட்லெட்! குழந்தைகளை குஷிப்படுத்தும் ஸ்னாக்ஸ்!
Paneer Cashew cutlet : பன்னீர் முந்திரி கட்லெட்! குழந்தைகளை குஷிப்படுத்தும் ஸ்னாக்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

பன்னீர் - 300 கிராம்

எண்ணெய் - 500 மிலி,

பெரிய வெங்காயம் - 2

சீரகத்தூள் - 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டஸ்பூன்

சோம்பு - 1 டஸ்பூன்

பட்டை - 2 சிறுதுண்டுகள்

நறுக்கிய கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு – 4

ரஸ்க் தூள் – தேவையான அளவு

நுணுக்கிய முந்திரி அல்லது நிலக்கடலை - 4 டஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு

முன் தயாரிப்பு

ரஸ்க் தூளை ஒரு தட்டில் தனியாக கொட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

மைதாவில் உப்பும் தண்ணீரும் சேர்த்து கெட்டியாக லஸ்ஸி பதத்துக்கு கரைத்து வைக்கவேண்டும்.

பன்னீர் மற்றும் வெங்காயத்தை தனித்தனியாக துருவி வைக்கவேண்டும்.

கிராம்பு, சோம்பு, பட்டை ஆகியவற்றை பவுடர் போல தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை

முதலில் கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் துருவிய பன்னீர், சீரக, மிளகாய்த்தூள்கள், பொடித்த கிராம்பு முதலான தூள்கள், நுணுக்கிய முந்திரி/நிலக்கடலை, உப்பு, மல்லித்தழை அனைத்தையும் இதோடு சேர்த்து வதக்கி நன்றாக கிளறிய பின்னர் இறக்கி வைக்கவேண்டும்.

இந்தக் கலவை ஆறியதும் உருண்டையாக்கி உங்களுக்கு பிடித்த கட்லெட் ஷேப்பிற்கு தட்டிக்கொள்ள வேண்டும்.

தட்டிய கலவையை ஒவ்வொன்றாக கரைத்த மைதா கலவையில் நன்றாக தோய்த்து எடுத்து பின்னர், அதை ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, அது நன்றாக சூடானதும் உங்கள் கடாய் அளவிற்கு தகுந்தபடி ஒரே நேரத்தில் 4 அல்லது 5 கட்லெட்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.

மாலை சிற்றுண்டிக்கு சூடான, சுவையான, மொறு மொறுப்பான பன்னீர் கட்லெட் தயார். சாஸ் அல்லது புதினா சட்னி வைத்து பரிமாறலாம். தக்காளி ஜாம் இருந்தாலும் இதற்கு அமர்க்களமான காம்போ.

இந்த கட்லெட்டை ஆயிலில் பொரித்த எடுப்பதுபோல், தவாவிலும் இதை மீன் ஃப்ரை செய்வது போல ஃப்ரை செய்து எடுத்துக்கொள்ளலாம்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்