Palak Paneer : பசுமையாக பாலக் பன்னீர் - அனைத்து வகை ரொட்டிக்கும் ஏற்ற சைட் டிஷ்! ஆரோக்கியமும் நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Palak Paneer : பசுமையாக பாலக் பன்னீர் - அனைத்து வகை ரொட்டிக்கும் ஏற்ற சைட் டிஷ்! ஆரோக்கியமும் நிறைந்தது!

Palak Paneer : பசுமையாக பாலக் பன்னீர் - அனைத்து வகை ரொட்டிக்கும் ஏற்ற சைட் டிஷ்! ஆரோக்கியமும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Sep 30, 2023 08:04 AM IST

Palak Paneer : சப்பாத்தி, பூரி, நான், ஃபுல்காவுக்க பெஸ்ட் காம்பினேசன், பாலக் பன்னீர் செய்வது எப்படி?

பாலக்பன்னீர் செய்வது எப்படி?
பாலக்பன்னீர் செய்வது எப்படி?

பன்னீர் – 100 கிராம்

இஞ்சி – 1 இன்ஞ்

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் – 3

ஃபிரஷ் கிரீம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கரம் மசாலா – அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் – பொடியாக நறுக்கியது

தக்காளி – பொடியாக நறுக்கியது

பட்டை – 1

சீரகம் – கால் ஸ்பூன்

பிரியாணி இலை – 1

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு கட்டு பாலக் கீரையை பெரிய தண்டுகளை நீக்கிவிட்டு, நன்றாக அலசிவிட்டு, கொதிக்கும் நீரில் 2 நிமிடம் சேர்த்து, வடிகட்டவேண்டும்.

பின்னர் உடனடியாக ஐஸ் வாட்டரில் சேர்க்க வேண்டும். நன்றாக ஆறியவுடன், வடிகட்டி எடுத்து மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் ஒரு இன்ச் இஞ்சி, 4 பல் பூண்டு, 3 பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

ஒரு கடாயில் தலா ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து அதில் கட் செய்து வைத்துள்ள பன்னீர் க்யூப்களை சேர்த்து நன்றாக டாஸ் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த கடாயிலே, சீரகம், பட்டை, ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கிவிட்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், அதில் அரைத்து வைத்துள்ள பாலக்கீரை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

பின்னர் உப்பு, அரை ஸ்பூன் கரம் மசாலா, கொஞ்சம் கையில நசிக்கிய கசூரி மேத்தி சேர்த்து நன்றாக கொதித்தவுடன் டாஸ் செய்து வைத்துள்ள பன்னுரை சேர்க்க வேண்டும். .

இறுதியில் ஃபிரஷ் க்ரீம் கொஞ்சம் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். க்ரீம் கடைகளில் கிடைப்பதை சேர்க்கலாம் அல்லது வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். க்ரீம் சேர்க்கும்போது பாலக் பன்னீர் கிரீமியாக ரெஸ்டாரன்ட் சுவையில் இருக்கும்.

க்ரீமியான, சுவையான, பிரபலாமான நார்த் இந்தியன் க்ரேவி பாலக் பன்னீர். பாலக் பனீரை நிறைய உணவுகளோடு க்ரேவியாக எடுத்துக்கலாம். சப்பாத்தி, நான், ஃபுல்கா, ஜீரா ரைஸ் போன்ற அனைத்துக்கும் சரியாக காம்பினேசன்.

நன்றி – சுமதி சிவக்குமார், வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.