அட ஆண்களுக்கும் மெனோபாஸ் இருக்கிறதா.. இந்த விஷயங்களை தெரியாம போச்சே.. ஆண்ட்ரோபாஸ் குறித்த முக்கிய தகவல் !
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் இந்த நிலை ஏற்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பெண்கள் வயதுக்கு ஏற்ப ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுகிறார்கள், ஆனால் ஆண்களும் வயதுக்கு ஏற்ப இதுபோன்ற சில அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்.

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கை பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. சமூகத்தில் அது குறித்த விழிப்புணர்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதே சமயம் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் காலகட்டத்தில் அவர்கள் தங்கள் உடலை எப்படி பார்த்து கொள்ள வேண்டும். அந்த பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் எந்த அளவிற்கு அக்கறை கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பல வகைகளில் வெளிப்படையாக அறிவுரை வழங்குகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பற்றி பலருக்கு தெரியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, பெண்களைப் போலவே, ஆண்களும் தங்கள் உடலில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றங்களை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள், இது ஆண்ட்ரோபாஸ் அல்லது ஆண் மெனோபாஸ் என்று கருத முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் தான் இந்த நிலை ஏற்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பெண்கள் வயதுக்கு ஏற்ப ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுகிறார்கள், ஆனால் ஆண்களும் வயதுக்கு ஏற்ப இதுபோன்ற சில அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்.
ஆண்ட்ரோபாஸ் மாதவிடாய் நிறுத்தத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
மாதவிடாய் என்பது பொதுவாக ஒரு பெண்ணின் உயிரியல் கடிகாரத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. ஆண்களில் ஆண்ட்ரோபாஸ் காலத்தில், இனப்பெருக்க உறுப்புகளின் உற்பத்தி முற்றிலும் மறைந்துவிடாது என்பது தான் உண்மை. ஆண்கள் எந்த வயதிலும் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறார்கள், பெண்களைப் போலல்லாமல், என்றும் இனப்பெருக்க திறன் கொண்டுள்ளனர்.
ஆண்ட்ரோபாஸ் காரணம்
ஆண்ட்ரோபாஸ் என்ற விசயம் 45 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களுக்கு மிகவும் பொதுவானது. அதேசமயம் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு சுமார் 50 சதவீதம் குறையலாம். கூடுதலாக, உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், ஹார்மோன் கோளாறுகள், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் மற்றும் நோய்த்தொற்றுகள் ஆகியவை முன்கூட்டிய ஆண்ட்ரோபாஸை ஏற்படுத்தும்.