நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தயக் கீரைகளை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி - பராமரிக்கும் முறைகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தயக் கீரைகளை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி - பராமரிக்கும் முறைகள்

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தயக் கீரைகளை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி - பராமரிக்கும் முறைகள்

Marimuthu M HT Tamil Published Nov 11, 2024 05:09 PM IST
Marimuthu M HT Tamil
Published Nov 11, 2024 05:09 PM IST

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தயக் கீரைகளை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி - பராமரிக்கும் முறைகள் குறித்துக் காண்போம்.

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தயக் கீரைகளை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி - பராமரிக்கும் முறைகள்
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தயக் கீரைகளை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி - பராமரிக்கும் முறைகள்

சில நேரங்களில் கீரைகளை வளர்ப்பது பற்றி வைரலாகும் வீடியோக்களைப் பார்க்கும்போது, நாம் இதைச்செய்தால் என்ன எனத்தோன்றலாம். இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு வீட்டில் வெந்தயக் கீரைகளை வளர்ப்பதுதான்.

வெந்தய இலைகளை வீட்டிலேயே மிக விரைவாகவும் எளிதாகவும் வளர்க்கலாம். வெந்தய செடிகளை பராமரிப்பதும் மிகவும் எளிதானது. வீட்டில் வெந்தய செடியை வளர்க்க உதவும் படிப்படியான உதவிக்குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

வீட்டில் வெந்தயக் கீரைகளை வளர்ப்பது எப்படி?

* முதலில் சந்தையில் இருந்து நல்ல தரமான வெந்தய விதைகளை வாங்கி வாருங்கள். இந்த செடியை வெட்டி நடவு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முழுதாக நடவு செய்வது நல்லது.

* மண் தொட்டியில் இதைப் பயிரிடுவதற்கு ஏதுவாக தண்ணீர் தேங்காமல் இருக்க அடிப்பகுதியில் துளை உள்ள தொட்டியைப் பார்த்து வாங்கவும்.

* மண்ணை நன்றாக கிளறிவிட வேண்டும். வெந்தயம் நன்கு வளர வளமான மண் தேவை.

* அப்படி கிளறிய கலவை மண்ணை மண் தொட்டியில் நிரப்பி, மேலே வெந்தயத்தைப் பரப்பவும்.

* வெந்தயத்தை உங்கள் கைகளால் மெதுவாக மண்ணின் உட்பகுதியில் அழுத்தவும்.

* இப்போது விதைகளின் மீது மண்ணை மெல்லியதாக பரப்பி, புதிய நீரைச் சேர்க்கவும்.

* இந்த அமைப்பினை நேரடியாக சூரிய ஒளி விழும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த மண் தொட்டிக்கு தினமும் 4-6 முதல் மணிநேர சூரிய ஒளி தேவைப்படுகிறது.

* வெந்தயம் நன்றாக வளர வேண்டுமென்றால் அதில் 3/4 பகுதியை மட்டுமே வெட்ட வேண்டும்.

வெந்தயக் கீரை விரைவாக வளர இவ்வாறு செய்யுங்கள்:

* வெந்தயக் கீரைகள் விரைவாக வளர, ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் நேரடி சூரிய ஒளியில் வைக்கவும். செடிக்கு ஒளி கிடைப்பது மிகவும் முக்கியம்.

வெந்தயக் கீரைக்கு அதிக தண்ணீர் ஊற்ற வேண்டாம். அதிகப்படியான தண்ணீர் ஊற்றினால், அழுகி பூஞ்சை நோய்களுக்கு ஆளாகிவிடும்.

* வெந்தயச் செடியை நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

* வெந்தயக் கீரை கைகளாலோ அல்லது நகங்களாலோ வெட்டக் கூடாது. வெந்தயச் செடியை வெட்ட கத்தரிக்கோலைப் பயன்படுத்தவும்.

* வெந்தயக் கீரைகளுக்கு 2-3 வாரங்களுக்கு ஒரு முறை சரிவிகித திரவ உரம் கொடுக்க வேண்டும். உர வழிமுறைகளை முன்கூட்டியே படியுங்கள் அல்லது ஒரு தோட்டக்கலை நிபுணரிடம் ஆலோசனைகளைக் கேளுங்கள்.

* பூச்சிகளைத் தவிர்க்க தாவரங்களின் மீது அடிக்கடி உங்கள் பார்வையை வைத்திருங்கள். பாதிக்கப்பட்ட வெந்தயக் கீரைகளை வெட்டி வீசுங்கள்.

  • வெந்தயம் குறைந்த விலை மற்றும் எளிதில் வளரக்கூடிய தாவரமாகும். நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் தோட்டத்தில் வெந்தயத்திற்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும். இது உணவுப் பொருட்களுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.