ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. நான் உங்க வீட்டு வேலைக்காரன் இல்ல.. களேபரமாகும் பிக்பாஸ் வீடு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. நான் உங்க வீட்டு வேலைக்காரன் இல்ல.. களேபரமாகும் பிக்பாஸ் வீடு..

ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. நான் உங்க வீட்டு வேலைக்காரன் இல்ல.. களேபரமாகும் பிக்பாஸ் வீடு..

Malavica Natarajan HT Tamil
Published Oct 09, 2024 01:44 PM IST

பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி கட்டுக்கோப்பாக ஒரு சிந்தனையில் செயல்படுகிறது என பலராலும் பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டியுள்ளது பிக்பாஸ். இவர்கள் வாய் சண்டை கைகலப்பு வரை மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. நான் உங்க வீட்டு வேலைக்காரன் இல்ல.. களேபரமாகும் பிக்பாஸ் வீடு..
ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. நான் உங்க வீட்டு வேலைக்காரன் இல்ல.. களேபரமாகும் பிக்பாஸ் வீடு..

ரஞ்சித்- ரவீந்தர் சண்டை

விஜய் டிவி வெளியிட்டுள்ள 3ம் நாளின் 2ம் ப்ரோமோவில், நடிகர் ரஞ்சித் ரவீந்தரை அடிக்கப் பாய்ந்து செல்வதும் அவரை சக போட்டியாளர்கள் தடுப்பதும் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி, இருவரும் போட்டியின்போது ஒருவருக்கு ஒருவர் ஒருமையிலும் பேசி உள்ளனர். இதனால், வீடே கலவரமாக மாறியுள்ளது.

ரவீந்தர் பெண்களுடன் ஏதோ பேசப்போக அது பிரச்சனையில் முடிந்துள்ளதாகத் தெரிகிறது. முதலில், கோவமாக உள்ள ரஞ்சித் ஏன் தேவையில்லாத வேலையை பண்றீங்க என ரவீந்தரிடம் ஆவேசமாக கேட்கிறார். அப்போது, பவித்ரா நீங்க கலாய்குற மூட்ல இருக்கிங்களா என ரஞ்சித்திடம் கேள்வி எழுப்புகிறார்.

அடிக்கப் பாய்ந்த ரஞ்சித்

இதற்குள் பதிலளித்த ரவீந்தர், யார் தேவையில்லாம பேசுறா, நீ ஏன் அந்தப் பொன்ன மிரட்டுறீங்க என கேள்வி எழுப்புகிறார். அப்போது கையை இறக்கி பேசுங்க என மீண்டும் கோவப்பட்ட ரஞ்சித் ரவீந்தரை அடிக்கப் பாய்கிறார்.

நீங்க ஒன்னும் பாஸ் கிடையாது. கேள்வி கேட்க. பிக்பாஸ் மட்டும் தான் பாஸ் என கோவமாக பேசுகிறார். இதற்கிடையில், ரஞ்சித்தை தடுக்கவந்த அருண் கீழே விழுகிறார்.

நான் உங்க வீட்டு வேலைக்காரன் இல்ல

தன்னை தடுக்க ஒரு கும்பல் இருக்கும் போது, அவர்களையும் சேர்த்தே முன் இழுத்து சென்று கோவத்தை காட்டியுள்ளார் ரஞ்சித். மேலும், கையை நீட்டிப் பேச நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

பின், ரவீந்தர் ஆவேசமாக எழுந்து நிற்க முயற்சி செய்து ஏய் நீ என்ன பண்ணிறுவ என அதட்டுகிறார். அவரை ஜாக்குலின் சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறார். இதுதான் விஜய் டிவி வெளியிட்டுள்ள இன்றைய ப்ரோமோ. இவர்கள் இருவரும் எதற்காக சண்டையிட்டனர். என்ன பிரச்சனை, யார் மேல் தவறு என்பதெல்லாம் இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.

விஜே விஷால்- பவித்ரா சண்டை

முன்னதாக விஜய் டிவி காலையில் வெளியிட்ட ப்ரோமோவில், விஜே விஷால், பவித்ரா ஜனனியை டி சொல்லி பேசியுள்ளார். அது பிடிக்காததால், பவித்ரா தன்னை அப்படி கூப்பிட வேண்டாம் என விஜே விஷாலிடம் கூறியுள்ளார், இருந்தும் அவர், நான் எல்லா பெண்களையும் அப்படி தான் அழைப்பேன் எனக் கூறி மீண்டும் டி சொல்லியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பவித்ரா, விஜே விஷாலிடம் சண்டையிட்டுள்ளார். இதனை வீடே திரும்பிப் பார்க்க சண்டை பெரிதாகிறது. நீ யாரை வேண்டுமானாலும் டி போட்டுக்கொள் ஆனால் என்னை அப்படி நீ கூப்பிடக் கூடாது அது எனக்கு பிடிக்கவில்லை என அவர் கோபமாக கூறினார். உடனே விஜே விஷால் அப்படி என்றால் நான் யாரை எப்படி கூப்பிட வேண்டும் எனவும் நீ சொல்லாதே என கத்தினார்.

இந்த இரண்டு ப்ரோமோவையும் பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியில் நிச்சயம் ஒரு சம்பவம் இருக்கிறது என பிக்பாஸ் பிரியர்கள் ஆவலாக இருக்கின்றனர்.