Morning Quotes : எச்சரிக்கை மக்களே! உங்கள் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது! அதை குறைக்கும் வழிகள் இதோ!-morning quotes warning people there are plastic particles in your food here are ways to reduce it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : எச்சரிக்கை மக்களே! உங்கள் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது! அதை குறைக்கும் வழிகள் இதோ!

Morning Quotes : எச்சரிக்கை மக்களே! உங்கள் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது! அதை குறைக்கும் வழிகள் இதோ!

Priyadarshini R HT Tamil
Sep 23, 2024 05:30 AM IST

Morning Quotes : எச்சரிக்கை மக்களே, உங்கள் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது. அதை குறைக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Morning Quotes : எச்சரிக்கை மக்களே! உங்கள் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது! அதை குறைக்கும் வழிகள் இதோ!
Morning Quotes : எச்சரிக்கை மக்களே! உங்கள் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது! அதை குறைக்கும் வழிகள் இதோ!

எப்போதும் ஃபில்டரில் இருந்து தண்ணீரை பருகுங்கள்

நீங்கள் குழாயில் இருந்து பிடித்து பருகும் தண்ணீரில் எப்போதும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருக்கலாம். எனவே நீங்கள் தண்ணீர் பருகும் முன் அதை வடிகட்டி பருகுவது நல்லது. வடிகட்டிகள் சில குப்பைகள் மற்றும் தூசிகளை அகற்ற உதவுபவையாகும். ஆர்.ஓ போன்ற உயர்தர வடிகட்டிகள் உங்களுக்கு நன்மை தருபவையாகும். எனவே அவற்றை பின்பற்றி தண்ணீரை பருகுங்கள்.

வீட்டு உணவுகள்

வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது, நீங்கள் மைக்ரோபிளாஸ்டிக்குகளை சாப்பிடும் ஆபத்து அதிகரிக்கும். பிளாஸ்டிக் துகள்கள், அந்த உணவுகள் அடைக்கப்படும் டப்பாக்களில் இருந்து வருவது அடிக்கடி நடக்கிறது. எனவே நீங்கள் இந்த துகள்கள் உட்கொள்வதை குறைப்பதற்கு வீட்டில் இருந்து உணவு சமைத்து சாப்பிடலாம். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து, நல்ல உணவை வீட்டிலே சமைத்து உண்பதில் கவனம் செலுத்துங்கள்.

மெட்டல் அல்லது கண்ணாடி பாத்திரங்கள்

பிளாஸ்டிக் ஃபுட் கண்டைனர்கள், உணவை சூடாக்கும்போது, மைக்ரோபிளாஸ்டிக்குகளை உணவில் கலக்கச் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்க முடியும். எனவே உணவை சேமிக்க கண்ணாடி அல்லது மெட்டல் பாத்திரங்களை பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு மாறாகப் பயன்படுத்துங்கள். கண்ணாடி அல்லது எவர்சில்வர் பாத்திரங்கள் பாதுகாப்பானவை மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியவை மற்றும் உங்கள் உணவை ஆபத்தான உட்பொருட்களிடம் இருந்து காப்பாற்றுபவையாகும்.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குள்

உலகளவில் அச்சுறுத்தும் பிளாஸ்டிக்குகளாக உள்ளது, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளாக உள்ளது. பாட்டில்கள், ஸ்ட்ராக்கள், பைகள் மற்றும் வெட்டும் கருவிகளில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் உள்ளன. எனவே அவை நாம் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் வழியாக உட்கொள்ளப்படுகின்றன. எனவே இந்த ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளுக்கு பதில், மீண்டும் பயன்படுத்த முடிந்த துணி, பைகள், மூங்கில் பொருட்கள், மெட்டல் பாட்டில்கள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

செயற்கைக்கு பதில் இயற்கை

பாலியஸ்டர், நைலான், போன்ற செயற்கை துணிகளில் மைக்ரோபிளாஸ்டிக் நார்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீங்கள் அலசும்போது அது சிதற வாய்ப்பு உள்ளது. இந்த நார்கள், தண்ணீரில் கலந்து மனிதர்கள் உடலுக்குள் உட்புகுகிறது. எனவே இயற்கை நார்களாக பருத்தி, லினென், வுல் ஆகியவற்றில் உடைகள், துண்டுகள், போர்வைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

பிளாஸ்டிக் பாத்திரங்களை தவிருங்கள்

உணவுகளை கிளறுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளான, ஸ்பூன்கள், கரண்டிகள் ஆகியவை பிளாஸ்டிக்கில் செய்து பயன்படுத்தப்படுகின்றன. இவை மக்கமுடியாதவையாகின்றன. மேலும் இவற்றை உணவு கிளறுவதற்கு பயன்படுத்தும்போது, அது பிளாஸ்டிக் துகள்களை வெளியிடுகின்றன. இவற்றை உயர் சூட்டில் பயன்படுத்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே சிலிக்கான், மரம் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் என பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.

கடல் உணவுகளை குறையுங்கள்

மீன், இறால் போன்ற கடல் உணவுகளில், குறிப்பிட்ட அளவு மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கலந்துள்ளன. இந்த கடல் விலங்குகள் அவற்றை உட்கொள்ள நேரிடுகிறது. அவை கடல் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக்குகளை சாப்பிடும்போது, அவை அவற்றின் உடலில் பரவிவிடுகின்றன. இறுதியில் அவை நமது உணவை வந்து அடைகின்றன.

தனிப்பட்ட பொருட்களை உபயோகியுங்கள்

தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் அலங்கார பொருட்களை உபயோகியுங்கள். உடம்பு தேய்க்கும் நார்கள், பிரஷ்கள், பேஸ்ட்கள், அலங்காரப்பொருட்கள், மணிகள் என அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அதிகம் உள்ளன. எனவே நீங்கள் ஒரு பொருளை வாங்கும் முன், அதில் பாலித்தீன் அல்லது பாலிப்ரோபிலின் ஆகியவை கலந்துள்ளதா எனப்பாருங்கள். எனவே இயற்கையில் நிவாரணம் தரும் மாற்றுகளுக்கு மாறிக்கொள்ள பழகுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.