Tips for Good Sleep: இரவில் தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள்? இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
Tips for Good Sleep: அதிகமான டிஜிட்டல் சாதன உபயோகத்தாலும் சரிவர தூக்கம் வருவதில்லை. உலகளாவிய அளவில் தூக்கமின்மை பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. காரணம் பெரும்பானமாயன மக்கள் தூக்கமின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக மயமாதல், இயற்கை மாற்றங்கள் ஆகிய காரணிகளால் உலகத்தின் சூழ்நிலைகள் மட்டும் மாறி வர வில்லை. மனிதர்களின் வாழ்வியல் முறைகளும் மாறி வருகின்றன. மக்களும் அவர்கள் செய்யும் வேலை, குடும்ப பிரச்சனைகள், அன்றாடம் மேற்கொள்ளும் பயணம் என பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான டிஜிட்டல் சாதன உபயோகத்தாலும் சரிவர தூக்கம் வருவதில்லை. உலகளாவிய அளவில் தூக்கமின்மை பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. காரணம் பெரும்பானமாயன மக்கள் தூக்கமின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தூக்கமின்மையில் இருந்த விடுபட வேண்டுமா! இதோ சில வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் போதும்.
நிம்மதியான தூக்கத்திற்கான வழிமுறைகள்
தூக்கத்திற்கான அட்டவணை: ஒரு வாரத்தில் உள்ள ஏழு நாட்களும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். எந்த நாளும் அந்த நேரத்தை தாண்டி முழித்திருக்க முயற்சி செய்ய கூடாது. இவ்வாறு செய்வதன் வழியாக தானாகவே தூக்கம் வருமாறு அதான் சூழற்சியை ஒழுங்கப்படுத்த முடியும்.
டிஜிட்டல் சாதனங்களை தவிர்த்தல்: தினம் தோறும் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே டிஜிட்டல் சாதங்களான மொபைல், டிவி, கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் இருந்து வரும் புளூ ரேஸ் எனும் கதிர்கள் இயற்கையாக வரும் தூக்கத்தை மட்டுபடுத்துகின்றன.