Morning Quotes : மனஅழுத்தத்தில் உழல்கிறீர்களா? என்ன செய்து உங்களை பாதுகாக்க முடியும்? இதோ டிப்ஸ்கள்!
Morning Quotes : மனஅழுத்தத்தில் உழல்கிறீர்களா? என்ன செய்து உங்களை பாதுகாக்க முடியும்? இதோ மனஅழுத்ததில் இருந்த விடுபட உதவும் டிப்ஸ்கள்.
உங்களின் மனஅழுத்தத்தை போக்க உங்களுக்கு இங்கு சிறந்த 10 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொண்டு பின்பற்றி பலன் பெறுங்கள். மனஅழுத்தம் அதிகப்படியாக இருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்வதற்கு தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் மனஅழுத்தத்தை விரைந்து போக்க சில வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதை நீங்கள் பின்பற்றும்போது அது உங்களுக்கு மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். உங்களின் மனஅழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும் 10 வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி உங்களின் மனஅழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் உடலும், மனமும் எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக சாதிக்க முடியும்.
உடற்பயிற்சி
சில எளிய உடற்பயிற்சிகளான ஓட்டம், நடை, யோகா அல்லது பயிற்சிகள் என எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டு கட்டாயம் செய்ய முயற்சி செய்யுங்கள். இதை குறைந்தபட்சம் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்யவேண்டும். குறிப்பாக நீங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதுபோல் உணர்ந்தால், அப்போது கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடல் எண்டோர்ஃபின்களை வெளியிடும். அது உங்களின் மனநிலையை மாற்ற உதவும். உங்கள் மனநிலையை தெளிவாக்கும்.
அமைதியான இசை
இயற்கை ஒலியுடன் அமைந்த அமைதியான இசையை பழகுங்கள். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக உங்களுக்கு மனஅழுத்தம் அதிகம் இருக்கும்போது செய்தால், அது உங்களின் மனநிலையை சீராக்கும். இசைக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் குணம் உண்டு. அது உங்களுக்கு ரிலாக்ஸ் கொடுக்கும். உங்களை மனஅழுத்த காரணிகளில் இருந்து காக்கும்.
நன்றி
நீங்கள் நன்றியுடன் நடந்துகொள்ளவேண்டிய விஷயங்களை பட்டியலிடுங்கள். அவை உங்களின மனதை பிரதிபலிக்கும். இதை நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போது செய்யுங்கள். நீங்கள் காட்டும் நன்றியுணர்வு உங்களை மனஅழுத்த காரணிகளிடம் இருந்து வாழ்வின் நேர்மறை எண்ணங்களுக்கு அழைத்துச்செல்லும். இது உங்களின் கோணத்தை மாற்றும். உங்களின் மனதை சமநிலைப்படுத்தும்.
நீர்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்
தண்ணீர் நிறைய பருகுங்கள். ஆரோக்கியமான ஒன்றை கட்டாயம் சாப்பிடுங்கள். குறிப்பாக பழங்கள் மற்றும் நட்ஸ்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வையுங்கள். குறிப்பாக நீங்கள் மனஅழுத்தமாக உணரும்போது, உங்களின் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கவேண்டும். நல்ல ஊட்டச்சத்து உங்களின் நலனுக்கு உதவும். உங்களின் மனம் மற்றும் ஆற்றலை அது நிலையாக வைத்திருக்க உதவும்.
அரோமாதெரபி
நீங்கள் குளிக்கும்போது அந்த நீரில் லாவண்டர் எண்ணெயை போன்றவற்றை பயன்படுத்தி குளியுங்கள். உங்கள் கைகளில் அவற்றை தடவிக்கொள்ளுங்கள். அரோமாதெரபி எடுக்கும்போ உங்களின் மனம் மற்றும் உடல் இனிமையாகும். வித்யாசமான நறுமணங்கள் உங்கள் மனநிலைக்கு மகிழ்ச்சியைத்தரும்.
சிறிய நடை
நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போது, வெளியில் சென்று 10 முதல் 15 நிமிடங்கள் ஒரு சிறிய நடை பயிலுங்கள். நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதுபோல் உணரும்போது இது மிகவும் உதவிகரமாக அமையும். உங்கள் சூழலில் உங்களை அச்சுறுத்தும்போது இது மிகவும் அவசியம். உங்கள் உடலுக்கு பயிற்சி, நல்ல ஃபிரஷ்ஷான காற்று, மற்றும் உங்களின் சூழல் மாற்றம் இவையனைத்தும் சேர்ந்து உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கும்.
மனநிறைவு தியானம்
நீங்கள் அமைதியான அமர்ந்துகொள்ளவேண்டும். உங்களின் மூச்சில் கவனம் இருக்கவேண்டும். உங்களின் எண்ணங்களை பாருங்கள். அவை எவ்வித விமர்சனங்களின்றியும் வருகிறதா பாருங்கள். இது சில நிமிடங்கள் செய்தால் கூட மிகவும் சிறப்பானதுதான். இதை நீங்கள் இடைவெளியில் செய்யலாம் அல்லது நீங்கள் அதிகம் மனஉடையும்போது செய்யலாம். இந்த வழக்கம் உங்களுக்கு இந்த காலத்தில் உங்களின் நிலையை உணர வைத்து உங்களின் பதற்றத்தை குறைக்கும்.
தசைகளுக்கு ரிலாக்ஸ்
உங்கள் உடலில் உள்ள தசைகளுக்கு ரிலாக்ஸ் கொடுங்கள். உங்களின் பயிற்சிகளை காலில் இருந்து துவங்கி தலை வரை கொண்டு செல்லுங்கள். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதை நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போதும் செய்யலாம். இது உங்களின் உடல் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும். உடல் குறித்த உங்களின் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும்.
ஆழ்ந்த மூச்சு பயிற்சி
உங்களின் மூக்கு வழியாக இழுக்கும் காற்றை மெதுவாக்குங்கள். இழுத்து சில நொடிகள் பிடித்து வைத்துக்கொண்டு, வாய்வழியான வெளியேற்றுங்கள். இது நீங்கள் சுவாசிக்க சிறந்த வழி. இதை நீங்கள் சில நிமிடங்கள் தொடர்ந்து செய்யவேண்டும் அல்லது நீங்கள் அதிகப்படியான டென்சனில் இருக்கும்போது செய்யவேண்டும். இது உங்களின் கார்டிசால் அளவைக் குறைக்கும். உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கும்.
தொழில்நுட்பங்களில் இருந்து விடுபடுங்கள்
திரைநேரத்தை குறையுங்கள். சமூக வலைதள பயன்பாட்டை நிறுத்திவிடுங்கள். நீங்கள் டிஜிட்டலில் செலவிடும் நேரத்தைக் குறைத்து வெளியில் செய்யும் நடவடிக்கைகளில் காட்டுங்கள். இது உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கும். இது உங்களை திரைக்கு செல்லத்தூண்டுவதையும் தடுக்கும். இது உங்கள் மனதுக்கு அமைதியைத்தரும்.
தொடர்புடையை செய்திகள்