HBD Vetrimaaran: ட்ராப் ஆன படம்.. கல்யாணத்தை நிறுத்த சொன்ன வெற்றிமாறன்.. அம்மா கொடுத்த கட்டளை! - வெற்றிமாறன் காதல் கதை!-aarthi vetrimaaran throwback interview about her love story with viduthalai part 2 director vetri maaran - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vetrimaaran: ட்ராப் ஆன படம்.. கல்யாணத்தை நிறுத்த சொன்ன வெற்றிமாறன்.. அம்மா கொடுத்த கட்டளை! - வெற்றிமாறன் காதல் கதை!

HBD Vetrimaaran: ட்ராப் ஆன படம்.. கல்யாணத்தை நிறுத்த சொன்ன வெற்றிமாறன்.. அம்மா கொடுத்த கட்டளை! - வெற்றிமாறன் காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 04, 2024 06:58 AM IST

HBD Vetrimaaran: வெற்றிமாறன் என்னிடம், படம் எடுப்பதற்கு பத்து வருடங்கள் ஆகும் என்று சொன்னபோது, என் மண்டைக்குள் அது ஏறவே இல்லை. அது அப்படியான வயது. அவர் இப்படி என்னிடம் சொன்னது 97, 98 காலகட்டம். - வெற்றிமாறன் காதல் கதை!

HBD Vetrimaaran: ட்ராப் ஆன படம்.. கல்யாணத்தை நிறுத்த சொன்ன வெற்றிமாறன்.. அம்மா கொடுத்த கட்டளை! - வெற்றிமாறன் காதல் கதை!
HBD Vetrimaaran: ட்ராப் ஆன படம்.. கல்யாணத்தை நிறுத்த சொன்ன வெற்றிமாறன்.. அம்மா கொடுத்த கட்டளை! - வெற்றிமாறன் காதல் கதை!

பிரபல இயக்குநர் வெற்றி மாறனின் மனைவி ஆர்த்தி வெற்றிமாறன் பல வருடங்களாக வெற்றிமாறனை காதலித்து வந்த நிலையில், வீட்டின் எதிர்ப்பையும் மீறியும் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வெற்றிமாறனுக்கும் தனக்கும் இடையே காதல் பூத்த கதையை கடந்த வருடம் ஸ்பாட்லைட் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருந்தார்.

என் மண்டைக்குள் அது ஏறவே இல்லை

இது குறித்து அவர் பேசும் போது ," வெற்றிமாறன் என்னிடம், படம் எடுப்பதற்கு பத்து வருடங்கள் ஆகும் என்று சொன்னபோது, என் மண்டைக்குள் அது ஏறவே இல்லை. அது அப்படியான வயது. அவர் இப்படி என்னிடம் சொன்னது 97, 98 காலகட்டம். அப்போது படம் எடுப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு படங்கள் என்றால், ரஜினி கமல் படங்கள் தான் தெரியும்.

எனக்கு கமலை மிகவும் பிடிக்கும். வெற்றியுடன் சேர்ந்த பிறகு தான் இயக்குநர்கள் அறிமுகமானார்கள். இயக்குநர்களை பார்த்து படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், நான் இவரை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் மிக மிகப் பிடிவாதமாக இருந்தேன். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நேரத்தில், நான் இதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

ஒருவருக்காக 8 வருடங்கள் 10 வருடங்கள் காத்திருப்பது என்பது பெரிய விஷயமே இல்லை. நாம் காதலிக்கும் பொழுது ஒருவரை ஒருவர் சந்திப்போம்..அதன் பின்னர் அவரவர் வீட்டுக்கு சென்று விடுவோம். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே ஒருவித இடைவெளி உருவாகும். அப்போது நாம் யோசிப்பதற்கு அதிக அளவு நேரம் கிடைக்கும்.

இதில் மிகவும் கஷ்டமான விஷயம் என்னவென்றால், அத்தனை வருடங்களில் எந்த சச்சரவு சண்டை வந்தாலும் ஒன்றாக இணைந்து இருப்பது தான். என்னை பொருத்தவரை ஒருவருடன் ஒன்றாக வாழ்வதை ஒப்பிடும்பொழுது, ஒருவருக்காக நீண்ட காலம் காத்திருப்பது என்பது ஈசியான விஷயம் தான். ஒன்றாக இருக்கும் பொழுது நமக்கு நிறைய பொறுப்புகள் தென்படும். ஒன்றாக சேர்ந்து இருக்கும் பொழுதுதான், நிறைய பிரச்சினைகள் சண்டைகள் சச்சரவுகள் உள்ளிட்டவை வரும். அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையானது இருக்கிறது. இதற்கிடையே, என்னுடைய வீட்டில் எனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்கான வேலைகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார்கள்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

அந்த சமயத்தில் எனக்கு வீட்டில் காதலை சொல்வதற்கு தைரியம் இல்லை. ஆனால் நான் ஒரு கடிதம் எழுதி நான் வெற்றிமாறனை காதலிக்கிறேன் என்றும் கல்யாணம் செய்தால் அவரை மட்டுமே கல்யாணம் செய்வேன் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தேன் இதனால் என்னுடைய அப்பா கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக என்னுடன் பேசாமலேயே இருந்தார். ஆனால் நான் வெற்றிமாறனை தான் கல்யாணம் செய்வேன் என்பதில் மிக மிகப் பிடிவாதமாக இருந்தேன்.

அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள்

இதனையடுத்து வெற்றிமாறனுக்கு படம் எடுப்பதற்கான வாய்ப்பு வந்தது. அட்வான்ஸ் தொகையாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதனையடுத்து அவர் என்னிடம் வந்து அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள். கல்யாணத்திற்கு வீட்டில் பேசிவிடு என்றார். இதனை தொடர்ந்து நான் வீட்டில் பேசினேன். கல்யாணத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவர் இயக்குவதாக இருந்த திரைப்படம் ட்ராப் ஆவதாக அறிவிப்பு வெளியானது.

அதனால் வெற்றிமாறன் கல்யாணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றார். நானும் ஓகே என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அம்மா, இல்லை கல்யாணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்த, அவர் கல்யாணம் செய்து கொண்டார்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.