Morning Quotes : ‘மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?’ இதுதான் காரணம்!
Morning Quotes : ‘மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?’ இவற்றுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று தெரிந்துகொள்ள ஆவல் என்றால் தொடர்ந்து படியுங்கள்.
உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இல்லை என்பதன் அறிகுறிகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அதற்கான தீர்வை எட்ட முடியும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆபத்தில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான். தொற்றுகள் மற்றும் நோய்களை நமது உடல் எதிர்த்து போராட வேண்டுமெனில், அதற்கு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கவேண்டும். எவ்வித உடல் உபாதைகளையும் உடல் இயற்கையான முறையில் எதிர்த்து போராட உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உதவுகிறது. ஆனால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் குறைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா? உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியில்லையென்றால், பின்வரும் அறிகுறிகள் தோன்றும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை உடனடியாக கவனிக்கவேண்டும் என்பதற்காக அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள். இவை தென்பட்டால் உடனடி நடவடிக்கை தேவை.
எப்போதும் சோர்வு மற்றும் உறக்கம்
ஒரு ஆழ்ந்த இரவு உறக்கத்துக்குப்பின்னரும் நீங்கள் சோர்ந்திருந்தீர்கள் என்றால், உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள். நீங்கள் எப்போதும் சோர்ந்திருந்தீர்கள், உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாக போராடி உங்களுக்கு ஏற்படும் தொற்றுகள் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது என்றால், அது பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
வயிற்று வலி மற்றும் அடிக்கடி செரிமானத் தொல்லை
உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றால், உங்கள் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரண்டும் தனித்தனியானவைதான் என்றாலும், உங்களின் செரிமான மண்டலத்தில் நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும் செல்கள் சிக்கியிருக்கும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் சரியான முறையில் இயங்கவில்லையென்றால், உங்களுக்கு அடிக்கடி செரிமானத் தொல்லைகள், வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் குடல் இயக்கத்தில் பிரச்னைகள் ஆகியவை ஏற்படும்.
தொடர் தலைவலி
தலைவலிக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் நினைவில் கொள்ளுங்கள். அவை வழக்கமாக உங்களுக்கு ஏற்படுமாயின், அது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் மிகுந்த அழுத்தத்தில் உள்ளது என்பதன் அறிகுறியாகும். நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் ஏற்படும் வீக்கம் அடிக்கடி தலைவலியை ஏற்படுத்தும்.
செரிமான கோளாறுகள் மற்றும் வயிறு உப்புசம்
நீங்கள் சாப்பிட்ட உடன் வயிறு உப்பிக்கொள்கிறது என்றாலும், உணவு செரிப்பதில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுகிறது என்றாலும், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு காரணமாகலாம். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மோசமாக இருந்தால், அது வயிறு உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். ஏனெனில், உங்கள் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்துவதில் அவற்றுக்கு பிரச்னைகள் ஏற்படலாம்.
நீண்ட நாள் பிரச்னைகள்
சளி அல்லது காய்ச்சல் வழக்கத்தைவிட அதிக நாட்கள் இருந்தால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவில்லை என்று பொருள். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் தொற்றுகளை குணப்படுத்த நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருந்தால், நீங்கள் பொதுவான நோய்களில் இருந்து எளிதில் விடுபடலாம். இல்லாவிட்டால் அவை பல நாட்கள் நீடிக்கும்.
காயங்கள் மெதுவாக ஆறும்
உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் வழக்கத்தைவிட மெதுவாக செயல்பட்டால் உங்களுக்கு ஏற்படும் புண்கள் மற்றும் காயங்கள் மெதுவாக குணமாகும். உங்கள் உடல் அவற்றை குணப்படுத்த அதற்கு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் வேண்டும்.
தொடர் தொற்றுகள்
தொடர் தொற்றுகள், அது காது அல்லது சருமம் அல்லது நுரையீரலில் ஏற்படும் தொற்று என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவையும் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்துள்ளது என்பதற்காக அறிகுறியாகும். உங்களுக்கு அடிக்கடி தொற்று ஏற்பட்டால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
தொடர்புடையை செய்திகள்