Accident: மரத்தில் வேன் மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி - நெஞ்சை உலுக்கும் காட்சி!
- கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 13 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து நேரிட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.