Morning Detox Drink Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த டீடாக்ஸ் பானம் பருகுவதால் என்ன நன்மைகள்?-morning detox drink benefits what are the benefits of drinking this detox drink every morning on an empty stomach - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Detox Drink Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த டீடாக்ஸ் பானம் பருகுவதால் என்ன நன்மைகள்?

Morning Detox Drink Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த டீடாக்ஸ் பானம் பருகுவதால் என்ன நன்மைகள்?

Priyadarshini R HT Tamil
Sep 23, 2024 10:54 AM IST

Morning Detox Drink Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த டீடாக்ஸ் பானம் பருகுவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Morning Detox Drink Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த டீடாக்ஸ் பானம் பருகுவதால் என்ன நன்மைகள்?
Morning Detox Drink Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த டீடாக்ஸ் பானம் பருகுவதால் என்ன நன்மைகள்?

இயற்கை முறையில் ரத்த அழுத்தத்தை குறைக்கும்

பீட்ரூட்டில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் உள்ளது. இதில் உள்ள நைட்ரேட் என்ற உட்பொருள், உங்கள் ரத்த நாளங்களை அமைதிப்படுத்த உதவும். நீங்கள் நீரிழிவு நோயாளி என்றால், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஏனெனில், பீட்ரூடில் சர்க்கரை உள்ளது. எனவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் அளவையும் சர்க்கரையின் அளவையும் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

வைட்டமின் சியுடன் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதிப்படுத்துங்கள்

நெல்லியில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதியளிக்கும் திறன்பெற்றது. நெல்லி உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்த உதவவில்லை. அது உங்கள் உடலின் வாஸ்குலர் மண்டலத்தையும் வலுப்படுத்தும்.

செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் வயிறு உப்புசத்தை குறைக்கிறது

இஞ்சி மற்றும் புதினா ஆகிய இரண்டும், இதில் சேர்க்கப்படும் முக்கிய உட்பொருட்கள் ஆகும். இது உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இஞ்சி செரிமான கோளாறுகளை சரிசெய்து அமிலங்கள் சுரப்பதை முறைப்படுத்தும். புதினாவில் உள்ள குளுமைப்படுத்தும் திறன்கள், உங்கள் வயிறை சரிசெய்ய உதவும்.

வீக்கத்தை கட்டுப்படுத்தும் இயற்கை உட்பொருட்கள்

பீட்ரூட் மற்றும் இஞ்சி ஆகிய இரண்டும் வீக்கத்துக்கு எதிரான சக்திவாய்ந்த உட்பொருட்கள் ஆகும். பீட்ரூட்டில் பீட்டாலைன்கள் உள்ளது. இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜரால், உங்களுக்கு ஏற்படும் மூட்டுவலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது

பீட்ரூட் மற்றும் நெல்லியில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. நெல்லியில் உள்ள உயர் ஆன்டி ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்கள் ஏற்படுத்தும் சேரத்தை தடுக்கும். உங்கள் சருமத்தின் வயோதிக தோற்றத்தை குறைக்கும். பீட்ரூட் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. அது உங்கள் உடலில் உள்ள அசுத்தங்களைப் போக்குகிறது.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சுத்தம் செய்ய உதவுகிறது

பீட்ரூட் மற்றும் நெல்லிக்காய் சாறில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும் இயற்கை உட்பொருட்கள் இருக்கும். பீட்ரூட்டில் உள்ள பீட்டைன், கல்லீரலின் கொழுப்பு வளர்திறனுக்கு உதவும். உடலில் உள்ள நச்சுக்களைப் போக்கும். நெல்லி, டையூரிக் அமிலமாக செயல்பட்டு, சிறுநீரக ஆரோக்கியத்து உதவும். அதில் உள்ள கூடுதல் தண்ணீரை அகற்றும், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றாமல் காக்கும்.

உடல் எடை குறைக்க உதவும்

இஞ்சி மற்றும் பீட்ரூட்டில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள் இதை சிறந்த உடல் எடை குறைக்கும் பானமாக மாற்றுகிறது. பீட்ரூட்டில் கலோரிகள் குறைவு. ஆனால், தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இஞ்சி கலோரிகள் எரிப்பதை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பானத்தை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – அரை

இஞ்சி – கால் இன்ச்

பட்டை – சிறு துண்டு

சீரகம் – கால் ஸ்பூன்

புதினா – 10 இலைகள்

செய்முறை

பீட்ரூட், இஞ்சி, புதினா, பட்டை, சீரகம் என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும். இதை வடிகட்டி தினமுக் காலையில் வெறும் வயிற்றில் வாரத்தில் மூன்று நாட்கள் பருகவேண்டும். சீரக்கத்தை வறுத்து பொடி செய்து வைத்து நேரடியாகவும் மேலே தூவி பயன்படுத்தலாம். பட்டையையும் பொடித்து வைத்துக்கொண்டு பொடியைத்தூவி பயன்படுத்தலாம். அது இந்த பானத்தின் சுவையை மேலும் அதிகரிக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.