Monsoon Skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தைப் பராமரிக்க உதவும் உதவிக்குறிப்புகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Monsoon Skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தைப் பராமரிக்க உதவும் உதவிக்குறிப்புகள்!

Monsoon Skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தைப் பராமரிக்க உதவும் உதவிக்குறிப்புகள்!

Marimuthu M HT Tamil Published Jul 13, 2024 05:44 PM IST
Marimuthu M HT Tamil
Published Jul 13, 2024 05:44 PM IST

Monsoon Skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவும் உதவிக்குறிப்புகள் குறித்துக் காண்போம்.

Monsoon skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தைப் பராமரிக்க உதவும் உதவிக்குறிப்புகள்!
Monsoon skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தைப் பராமரிக்க உதவும் உதவிக்குறிப்புகள்! (Pexels)

இதனைப்போக்க அன்றாட வழக்கத்தில் புதிய முறைகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். 'அத்தியாவசிய உதவிக்குறிப்புகள்' என்ற ஹேஷ்டேக்கை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த மழைக்காலத்தில் இந்த பட்டியல் உங்களுக்கு உதவும். 

இதுதொடர்பாக லா கிளினிக்கில் (ஹைதராபாத்) அழகியல் மருத்துவர் டாக்டர் மிலி சின்ஹா மற்றும் ஓட்டேரியாவைச் சேர்ந்த தோல் பராமரிப்பு நிபுணர் அதிதி ஜெயின் ஆகியோர் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு தங்கள் பரிந்துரைகளை பகிர்ந்து கொண்டனர். இது மழைக்கால துயரங்களை எளிதாக வழிநடத்தவும், உங்கள் சருமத்தை பளபளப்பாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். 

1. இரட்டை சுத்திகரிப்புடன் பாதுகாப்பாக இருங்கள்:

மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முதல் விதி "அதை சுத்தமாக வைத்திருங்கள்". உங்கள் உடலின் மேல்பகுதியில் இருந்து அழுக்கு, தூசி மற்றும் வியர்வையை எதிர்த்துப் போராட எப்போதும் இரண்டு முறை நீரில் கழுவுவதை உறுதிசெய்யவும். சேதமடைந்த சருமத்தை சரிசெய்ய வெள்ளை தேநீருடன் மென்மையான ஃபேஸ் வாஷைத் தேர்வுசெய்யவேண்டும். இது தோல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மற்றும் நிறத்தைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் பளபளப்புடன் வாழ்வதற்கு மென்மையான வாய்ப்பினை வழங்குகிறது. 

2. உங்கள் தோல் வகை என்ன?:

ஒருவரின் தனித்துவமான தோல் வகையைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. ஒவ்வொரு தோல் வகையும் எண்ணெய் நிறத்தோல், உலர்ந்த தோல், இரண்டும் கலந்த தோல் எனப் பலவகை கொண்டது. 

உங்கள் நிறத்தின் தோற்றத்தையும் அமைப்பையும் பாதிக்கும் சில காரணங்களும் இருக்கின்றன. உதாரணமாக, ஈரப்பதமான மழைக்காலத்தில் எண்ணெய் சருமம் அதிகப்படியான எண்ணெய்த்தன்மையுடன் இருக்கும். அதேசமயம் வறண்ட சருமத்திற்கு ஈரப்பத இழப்பை எதிர்த்துப் போராட கூடுதல் நீரேற்றம் தேவைப்படுகிறது. எனவே, உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் சில படிகள் சீரானதாக இருக்கும்போது, மழைக்காலத்தால் ஏற்படும் குறிப்பிட்ட சவால்களுக்கு ஏற்ப உங்கள் வழக்கத்தை மாற்றியமைப்பது அவசியம்.

3. உடலின் உள்ளேயும் வெளியேயும் நீரேற்றமாக வைத்திருங்கள்:

 சீரான தோல் பராமரிப்புக்கு, உங்கள் சருமத்தை நீரேற்றம் செய்வது அவசியம். தோல் நீரேற்றம் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடலில் நீரேற்றத்தை மீட்டெடுக்க, புதிய கிவி மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற ஜூஸ்களை எடுத்துக்கொள்ளலாம். இது தினசரி மாசுபாட்டை எதிர்த்துப் போராட தோலுக்கு உதவுகிறது. நம் தோலைப் பிரகாசம் ஆக்குகிறது. 

4. சூரியப் பாதுகாப்பு ஜெல்லை ஒதுக்காதீர்கள்:

மழை நாட்களில் சூரிய பாதுகாப்பைத் தவிர்ப்பது பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சிந்தியுங்கள். மழைக்காலத்தில் சூரியன் கண்ணாமூச்சி விளையாடும்போது கூட, சன் ஸ்கிரீன் மிக முக்கியம். 

 எனவே, சூரியப்பாதிப்பு இருக்கும்போது தோலைப் பாதுகாக்க கற்றாழை மற்றும் பேரிக்காயுடன் செறிவூட்டப்பட்ட சூரிய பாதுகாப்பு ஜெல்லைத் தேர்வுசெய்து, தோலில், முகத்தில் தேய்த்தால் பளபளப்பினைப் பெறலாம். 

5. உங்கள் மேக்கப்பை குறையுங்கள்:

மழைக்காலங்களில், உங்கள் சருமத்தைப் பாதுகாக்க உதவும் குறைந்தபட்ச ஒப்பனை மற்றும் நீர்ப்புகா தயாரிப்புகளுக்கு எப்போதும் 'ஆம்' என்று சொல்லுங்கள். மழைக்காலம் முழுவதும் புதிய மற்றும் வசதியான தோற்றத்திற்காக பாரம்பரிய உதட்டுச்சாயங்களுக்கு பதிலாக வண்ணமயமான லிப் பாம்களுக்கு மாறுவது நல்லது.

6. இருண்ட வானிலையில் ஒளிர இதைச்செய்யுங்கள்:

ஒரு பெரிய மழை பெய்யும்போது, வியர்வையுடன் கலந்த மழைநீர் உங்கள் சருமத்தின் அழகைப் பாதிக்கும். எனவே, வியர்வை பட்ட உங்கள் தோலைச் சுத்தமாக்க நன்கு உடலைத்தேய்த்துக்குளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

7. கருவளையங்களுக்கு குட்பை சொல்லுங்கள்:

மழைக்காலத் தோல் பராமரிப்பு உதவிக்குறிப்புகளை நீங்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, கீழ் கண்களை புறக்கணிக்காதீர்கள்.

கண்களுக்குக் கீழே இருக்கும் கருவளையங்கள், சோர்வாகி தொங்கும் கண்கள் ஆகியவற்றைச் சரிசெய்ய, உங்கள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோலை இனிப்பு ஆரஞ்சு துண்டுகளை வெட்டி வைத்து உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள், 

 இந்த பொருட்கள் தோலில் இருக்கும் மங்கலான சுருக்கங்கள், கோடுகள் மற்றும் தொய்வான சருமத்தை திறம்பட எதிர்த்துப் போராடுகின்றன. உங்கள் கண்கள் துடிப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உறுதி செய்கின்றன.

8. சருமத்தை உள்ளேயும் பத்திரமாக வைத்திருப்பது முக்கியம்:

உங்கள் சருமத்தின் வெளிப்புறத்தை பராமரிப்பது மட்டும் போதாது; ஆரோக்கியமான உணவுக்கும் அழகான சருமத்திற்கும் இடையிலான தொடர்பை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, ஆரோக்கியமான மற்றும் நன்கு சீரான உணவு முக்கியமானது.