Mess Kara Chutney : மெஸ் காரச்சட்னி; இட்லி, தோசை என அனைத்து டிபஃனுக்கும் ஏற்றது! ரசித்து ருசித்து சாப்பிட இதோ ரெசிபி!-mess kara chutney mess kara chutney perfect for all dips like idli dosa heres the recipe to enjoy - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mess Kara Chutney : மெஸ் காரச்சட்னி; இட்லி, தோசை என அனைத்து டிபஃனுக்கும் ஏற்றது! ரசித்து ருசித்து சாப்பிட இதோ ரெசிபி!

Mess Kara Chutney : மெஸ் காரச்சட்னி; இட்லி, தோசை என அனைத்து டிபஃனுக்கும் ஏற்றது! ரசித்து ருசித்து சாப்பிட இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Sep 10, 2024 10:58 AM IST

Mess Kara Chutney : மெஸ் காரச்சட்னி; இட்லி, தோசை என அனைத்து டிபஃனுக்கும் ஏற்றது. ரசித்து ருசித்து சாப்பிட இந்த ரெசிபியை பாருங்கள்.

Mess Kara Chutney : மெஸ் காரச்சட்னி; இட்லி, தோசை என அனைத்து டிபஃனுக்கும் ஏற்றது! ரசித்து ருசித்து சாப்பிட இதோ ரெசிபி!
Mess Kara Chutney : மெஸ் காரச்சட்னி; இட்லி, தோசை என அனைத்து டிபஃனுக்கும் ஏற்றது! ரசித்து ருசித்து சாப்பிட இதோ ரெசிபி!

சட்னியில் மற்றொரு வகை துவையல். இது சாப்பாட்டுடன் தொட்டுக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வெரைட்டி சாதங்களுக்கு துவையல்களே தொட்டுக்கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. மூலிகை தாவரங்களில் இருந்தும் சட்னிகள் மற்றும் துவையல்கள் தயாரிக்கப்படுகிறது. அதில் சேர்க்கப்படும் உட்பொருட்களுக்கு ஏற்ப சட்னியின் நிறம் மாறுகிறது.

சட்னிகள் மிக்ஸியில் அரைக்கப்படுகின்றன அல்லது அம்மியில் அரைத்து உட்கொள்ளப்படுகின்றன. சட்னிக்கு உட்பொருட்களாக பொட்டுக்கடலை, கடலை பருப்பு, உளுந்து, எள், கடலை ஆகிய பருப்பு வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் சட்னியை வதக்கி தாளிக்க எண்ணெய் வகைகளையும் பயன்படுத்துகின்றனர்.

இதனால் ஒரு சட்னியிலே எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைத்துவிடுகிறது. காலையில் காலை உணவுடன் பரிமாறப்படும் சட்னியே பல்வேறு நன்மைகளைக் கொடுத்துவிடுகிறது என்பதால் இது காலை உணவு முதலே சாப்பாட்டில் இடம்பெறுகிறது. இன்ஸ்டன்ட் சட்னி பொடிகளும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தியும் சட்னி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1

தக்காளி – 1

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

பூண்டு – 6 பல்

குண்டு வர மிளகாய் – 4

தேங்காய் துருவல் – கால் கப்

மல்லித்தழை – சிறிது

பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன்

புளி – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – சிறிதளவு

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வரமிளகாய் – 2

பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரைக்கும் வதக்கவேண்டும். பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்றாக தக்காளி மசிந்து வரும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் அதை ஆறவைத்து அதனுடன் பூண்டு, மிளகாய், மல்லித்தழை, தேங்காய் துருவல், புளி, பொட்டுக்கடலை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து மிகவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாகவே அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவேண்டும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும், அந்த சட்னியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையில் மெஸ் காரச்சட்னி தயார்.

இதை இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆப்பம், காரப்பணியாரம், உப்புமா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதுபோன்ற ரெசிபிக்களும், அவை குறித்த சிறப்பு தகவல்களையும் தினமும் ஹெச்.டி தமிழ் வழங்கி வருகிறது. அவற்றை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.