Menopause : பெண்களின் கடைசி மாதவிடாய் எப்படி இருக்கும் தெரியுமா? மெனோபாஸ் குறித்து முக்கிய தகவல்கள்!
Menopause : ஒவ்வொரு பெண்ணும் அவர்களது 40 வயதிற்கு மேல் மெனோபாஸ் எனப்படும் கடைசி மாதவிடாய் நிகழ்வை எதிர்கொள்கின்றனர். இந்நிகழ்வில் அதிகப்படியான இரத்த போக்கு உண்டாகும்.
பொதுவாகவே பெண்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகின்றன. இத்தகைய ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் வாழ்நாள் முழவதும் பல உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியதாகியுள்ளது.இதில் முக்கியமான ஒன்றாக மாதம் தோறும் நிகழும் மாதவிடாய் சுழற்சி உள்ளது. இந்நிலையில் பெண்களின் வாழ்நாளில் நடைபெறும் இறுதியான மாதவிடாய் சூழற்சியை மெனோபாஸ் எனும் நிகழ்வு ஆகும். இது குறித்தான முக்கிய தகவல்களை இங்கு காண்போம்.
கருமுட்டை எண்ணிக்கை
ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே அதன் கருப்பையில் சுமார் 2 மில்லியன் கருமுட்டைகள் இருக்கும். அப்பெண் அவளது முதல் மாதவிடாய் சூழற்சியை அடையும் போது அவை ஏறத்தாழ 3 லட்சம் முட்டைகளாக குறையும். இவை ஒவ்வொரு மாதமும் வெளி வருவதால் மாதவிடாய் சுழற்சி நடைபெறும்.
பெண்களின் கருப்பையில் இருக்கும் முட்டைகள் மொத்தமாக வெளியேறுவதே இறுதியாக அப்பெண்ணின் வாழ்நாளில் நடைபெறும் கடைசி மாதவிடாய் சூழற்சி. இது மெனோபாஸ் நிகழ்வு ஆகும். இறுதியாக தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருக்கும் பொது மெனோபாஸ் நிலையை எட்டுகிறது.
சரியான வயதில் மெனோபாஸ்
இயற்கையாக இறுதி மாதவிடாய் ஏற்படும் வயது பொதுவாக உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு 45 முதல் 55 வயது வரை இருக்கிறது. சில பெண்களுக்கு 40 வயதுக்கு முன்னதாகவே மெனோபாஸ் நிகழ்கிறது. இதனை முன்கூட்டிய மெனோபாஸ் (‘premature menopause’ )என்பர். இது சில அசாதாரண குரோமோசம்களால் உண்டாகலாம்.
பெரும்பான்மையான பெண்கள் 40 வயதிற்கு மேல் இதனை எதிர் கொண்டாலும் , ஒரு பெண்ணின் மெனோபாஸ் ஏற்படும் வயதை துல்லியமாக கணக்கிட முடியாது. கருப்பையை அகற்றுவது, கருப்பை செயல்பாட்டை நிறுத்தும் மருத்துவ சிகிச்சைகளாலும் மெனோபாஸ் நடக்கும்.
மெனோபாஸுடன் தொடர்புடைய மாற்றங்கள்
மெனோபாஸ் நடைபெறும் போதும் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் தோன்றுகின்றன. மாதவிடாய் நின்ற சமயத்தில் அதைத் தொடர்ந்து ஏற்படும் அறிகுறிகள் நபருக்கு நபர் கணிசமாக வேறுபடும். சிலருக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் குறைவாகவே இருக்கும். முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் சிவந்து போகும். இரவில் அதிக்கப்படியான வியர்வை ஆகியவை ஏற்படும். மன ரீதியாயன சோர்வு, பதட்டம் அதிகரிக்கும்.
மெனோபாஸ் நடக்கும் போது சுமார் 10 நாட்கள் தொடர் இரத்தப் போக்கு ஏற்படும். இதன் காரணமாக பெண்கள் மிகவும் சோர்வாக காணப்படலாம். உலக அளவில் மெனோபாஸ் குறித்தான விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட தொடங்கி உள்ளது.
மெனோபாஸ் சிகிச்சை முறைகள்
அதிக பட்சமாக உடலில் ஹார்மோன் மாற்றங்களினால் கொலஸ்டரால் அதிகரிக்கும். இடுப்பு ஆதரவு அமைப்புகளை பலவீனப்படுத்தவும், மாதவிடாய் நிறுத்தத்தில் எலும்பு அடர்த்தி குறைவது முக்கிய குறைபாடாகும். மேலும் பெண்ணுறுப்பு வறட்சி, உடலுறவின் போது வலி ஆகியவையும் ஏற்படும்.
இதனால் ஏற்படும் உடல் பிரச்சனைகளுக்கு ஹார்மோன் தெரப்பி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது முறையான மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மேற்க்கொள்ளப்பட வேண்டும். 40 வயதை கடந்த அனைத்து பெண்களும் இது குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்