Masala Pasta : மணமணக்கும் மசாலா பாஸ்தா! குழந்தைகள் குதூகலிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்! அடிக்கடி ருசிக்க தூண்டும்!
Masala Pasta : இன்னும் இதனை சுவையாக்க, மெசரல்லா சீஸ் சேர்க்கவேண்டும். இதில் பார்மேசன் சீஸ் சேர்த்தால், இன்னும் நன்றாக இருக்கும். இதை மதிய உணவு, இரவு உணவு என எதற்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
பென்னே பாஸ்தா – ஒரு கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பீன்ஸ் – அரை கப் (நறுக்கியது)
கேரட் – அரை கப் (நறுக்கியது)
பச்சை பட்டாணி – அரை கப்
உப்பு – தேவையான அளவு
கஷ்மீரி மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
மிளகு தூள் – கால் ஸ்பூன்
சாட் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு
மோஸ்சரெல்லா சீஸ் – தேவையான அளவு
செய்முறை -
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும். உப்பு மற்றும் பாஸ்தாவை சேர்க்கவேண்டும்.
பாஸ்தா முழுமையாக வேகும் வரை சமைக்கவேண்டும். பின்னர் அவற்றை வடிகட்டவேண்டும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் எடுக்கவேண்டும். நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்க வேண்டும்.
நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக வதக்கவேண்டும்.
நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவேண்டும். சில நிமிடங்கள் வதக்கவேண்டும்.
உப்பு சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவேண்டும். பிறகு கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகு தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.
அடுத்து தண்ணீர் சேர்த்து, நன்றாக கலக்கவேண்டும். பின், கடாயை மூடி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் காய்கறிகளை சமைக்கவேண்டும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் துருவிய சீஸ் சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக கலக்கவேண்டும்.
சுவையான, காரமான மசாலா பாஸ்தா சூடாக பரிமாற தயாராக உள்ளது.
இந்திய சுவைகள் தனித்துவமானவை, அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள்தான் காரணம். சில மசாலாப் பொருட்களின் கலவையும்தான்.
மசாலாப் பொருட்கள் பேஸ்ட்கள், மசாலா பாஸ்தா செய்யும்போது, இது சுவை நிறைந்ததாக இருக்கும். இது காரமாகவும் இருக்கும். நன்றாகவும் இருக்கும். ஸ்டீரிட் உணவுகள் பிடித்தவர்களுக்கு இந்த பாஸ்தா மிகவும் பிடிக்கும்.
இன்னும் இதனை சுவையாக்க, மெசரல்லா சீஸ் சேர்க்கவேண்டும். இதில் பார்மேசன் சீஸ் சேர்த்தால், இன்னும் நன்றாக இருக்கும். இதை மதிய உணவு, இரவு உணவு என எதற்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்