Mango Vs Banana: மாம்பழ ஜூஸ் - வாழைப்பழ ஜூஸ் எது உடலுக்கு நல்லது - ஆயுர்வேதம் சொல்வது என்ன?
Mango Vs Banana: மாம்பழ ஜூஸ் - வாழைப்பழ ஜூஸ் எது உடலுக்கு நல்லது என்பது குறித்தும் ஆயுர்வேதம் சொல்வது என்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.
Mango Vs Banana: பழச்சாறுகள் நம் உடலை குளிர்விக்க உதவுகிறது. ஜீரணிக்க எளிதானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது. பழச்சாறுகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதுநாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது.
மாம்பழம், வாழைப்பழம், பெர்ரி, மாதுளை, தர்பூசணி என அனைத்திற்கும் அதிக தேவை இருப்பதில் ஆச்சரியமில்லை. இவற்றை புட்டு முதல் ஜூஸ்கள் வரை பல்வேறு வடிவங்களிலும் உட்கொள்ள முடியும். மாம்பழ ஜூஸ், வாழை ஜூஸ் மற்றும் பிற பழ ஜூஸ்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. இதனால் காலை உணவாகப் பலரும் எடுத்துக்கொள்கின்றனர்.
இருப்பினும், ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, பழங்களை பாலில் கலந்து குடிக்கும்போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவை பல உடல் நலப் பிரச்னைகளுக்கு வேராக இருக்கக்கூடிய நச்சு துணை தயாரிப்புகளை உருவாக்குகின்றன.
மாம்பழ ஜூஸ் மற்றும் வாழைப்பழ ஜூஸ்: எது ஆரோக்கியமானது?
எல்லா பழங்களும் பாலுடன் சேர்ந்து குடிக்க ஏற்றது அல்ல. ஆயுர்வேத கண்ணோட்டத்தில், இயற்கையில் இனிமையான மற்றும் முழுமையாக பழுத்த பழங்கள் மட்டுமே பாலை ஒரு மூலப்பொருளாகக் கொண்ட உணவு தயாரிப்புகளுக்கு ஏற்றவை. மாம்பழம், வாழைப்பழம் இரண்டுமே இனிப்பானவை. இதில் நமக்கு எது ஆரோக்கியமானது? வாருங்கள் பார்ப்போம்.
ஆயுர்வேதத்தின்படி, இதற்குப் பதில் இல்லை. ஏனெனில் வாழைப்பழம் இனிப்பாக இருக்கலாம். ஆனால் அதன் செரிமான விளைவு புளிப்பாக இருப்பதால் பாலுடன் சாப்பிட தகுதியற்றது.
"அவை இனிப்பாக இருந்தாலும், அவற்றை பாலுடன் உட்கொண்ட பிறகு, செரிமான விளைவு புளிப்பாக இருக்கும். எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது" என்று ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பாவ்சர் சவலியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறுகிறார்.
இதன்பொருள் வாழை ஜூஸ்களை கவனமாகவும் மிதமாகவும் உட்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தின்படி மாம்பழ ஜூஸ் ஆரோக்கியமானதா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
மாம்பழ ஜூஸ் பற்றி என்ன?
"பழுத்த இனிப்பு மாம்பழத்தை பாலுடன் சேர்க்கலாம்" என்று டாக்டர் சவாலியா கூறுகிறார். "பாலுடன் கலந்த ஒரு பழுத்த மாம்பழம் வாதம் மற்றும் பித்தத்தை அமைதிப்படுத்துகிறது. இது சுவையானது. ஊட்டமளிக்கிறது. பாலுணர்வு மற்றும் நிறத்தை மேம்படுத்துகிறது. இது இயற்கையில் இனிப்பு மற்றும் குளிர்ச்சியானது" என்று டாக்டர் சவாலியா கூறுகிறார். இதன் பொருள் மாம்பழ ஜூஸை எந்த கவலையும் இல்லாமல் உட்கொள்ளலாம். ஆனால் ஏதேனும் நாள்பட்ட நிலையில் உடல்நோய்ப் பாதிப்பு இருந்தால், உங்கள் சுகாதார நிபுணரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ள வேண்டும்.
எந்தப் பழங்களை பாலுடன் கலக்கலாம் என்பது குறித்த ஆயுர்வேத பரிந்துரைகளையும் டாக்டர் சவாலியா பகிர்ந்து கொண்டார்:
- பால் முற்றிலும் இனிப்பு மற்றும் பழுத்த பழங்களுடன் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
- பழுத்த இனிப்பு மாம்பழத்தை பாலுடன் சேர்க்கலாம்.
- வெண்ணெய் பழத்தை பாலுடன் கலக்கலாம் (இது கிரீமி, வெண்ணெய் மற்றும் சிறிது துவர்ப்பு).
- உலர் திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை பாலுடன் எடுத்துக் கொள்ளலாம்.
- அனைத்து பெர்ரிகளையும் (ஸ்ட்ராபெர்ரி உட்பட) பாலில் கலப்பதைத் தவிர்க்கவும். நாம் பாலில் பெர்ரிகளை சேர்க்கும்போது, பால் உடனடியாக தயிராக இருக்காது - ஆனால் நமது ஆரம்ப செரிமானத்திற்குப் பிறகு அது தயிராக இருக்கும் என்றார்.
- மேற்கண்ட ஜூஸில் மாம்பழ ஜூஸிலும், வாழைப்பழ ஜூஸிலும் பால் கலக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்