‘மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா’ மனஅழுத்தத்தை போக்குவது, உறக்கம் என மணமணக்கும் மல்லி தரும் நன்மைகள் எத்தனை?
‘மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா’ மனஅழுத்தத்தை போக்குவது, உறக்கம் என மணமணக்கும் மல்லி தரும் நன்மைகள் எத்தனை என்று பாருங்கள்.

மல்லிகை மன்னன் மட்டுமில்லை அனைவருமே மயங்கும் பொன்னான மலர்தான். மல்லிகையை வாங்கி வீட்டில் வைத்தால் உங்களுக்கு அது மணத்தை தரும். இது உங்கள் மனநிலையை மாற்றும். இது நமது பாரம்பரியத்தில் உள்ளது. கடவுளுக்கு படைப்பது மற்றும் பெண்கள் தலையில் சூடிக்கொள்வது என இந்த மலருக்கு அத்தனை பயன்பாடுகள் உள்ளது. மல்லியில் ஒற்றை மல்லி, அடுக்கு மல்லி என எண்ணற்ற வகைகள் உள்ளது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவும், உடலில் ஹார்மோன்களின் அளவை முறைப்படுத்தும், மனஅழுத்தத்தைக் குறைக்கும், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். மலர்களில் ராணி மல்லிகைதான். இதற்கு அதன் மணம் மட்டுமல்ல மருத்துவ குணமும்தான் காரணம். இதை சூடிக்கொள்ள மட்டுமல்ல சமையலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மல்லிகை டீ மற்றும் மற்ற மூலிகை தேநீர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகை சர்பத்தும் உள்ளது. இதன் அதிகப்படியான மணம் இதை பர்ஃப்யூம்கள், லோசன்கள், ஷாம்பூக்கள் மற்றும் பல சருமம் மற்றும் தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் இடம்பெற காரணமாகும்.
மல்லிகைத் தேநீர் சீனாவில் பிரபலம். இதில் உள்ள கேட்சின்கள் மற்றும் எபிகேட்சின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலுக்கு தேவையான நன்மைகளையும் மன ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
மல்லிகைப்பூவின் நன்மைகள்
செரிமான ஆரோக்கியம்
மல்லிகைப்பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள வாயு எண்சைம்களுடன் வினைபுரிந்து, செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வயிறு உப்புசம், வலி, வயிறு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக காரணமாகிறது. இது உங்கள் உடலில் இருந்து கெட்ட பாக்டீரியாக்களை அடித்து வெளியேற்றுகிறது. நச்சுக்களையும் போக்குகிறது.