World Heart Day: உடலின் ஆதாரம் இதயம்! இதய தினத்தின் முக்கியத்துவம் என்ன?
World Heart Day: ஒவ்வொருவருக்கும் உடலின் முக்கிய ஆதார உறுப்பாக இருப்பது இதயம், இத்தகைய இதயத்தில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். எனவே இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஓட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம்.

உலக அளவில் இதய நோய் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு உண்டாகிறது. ஒவ்வொருவருக்கும் உடலின் முக்கிய ஆதார உறுப்பாக இருப்பது இதயம், இத்தகைய இதயத்தில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். எனவே இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஓட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம். இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய கூட்டமைப்பு சார்பில் உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.
இதய நோய் தினமானது உலகம் முழுவதும் உள்ள மக்களிடத்தில் இதய நோய் மற்றும் இருதய நோய்களை நிர்வகிப்பதற்கான அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படுகிறது. மேலும் இது தொடர்பாக உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் வாயிலாக கொண்டாடப்படுகிறது.
உலக இதய தினத்தின் முக்கியத்துவம்
இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே ஒவ்வொருவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். இருதய ஆரோக்கியம் மற்றும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இருதய நோய்கள் (CVDs) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1.7 கோடி மக்கள் இருதய நோயால் இறக்கின்றனர், இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31% ஆகும்.