Belly Fat: பணத்தொப்பையைக் குறைக்க உதவும் 5 உணவுகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Belly Fat: பணத்தொப்பையைக் குறைக்க உதவும் 5 உணவுகள்!

Belly Fat: பணத்தொப்பையைக் குறைக்க உதவும் 5 உணவுகள்!

Marimuthu M HT Tamil
Feb 28, 2024 01:30 PM IST

தொப்பையைக் குறைக்க உதவும் 5 உணவுகளை ஆராய்வோம்.

பெண்களின் பணத்தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்!
பெண்களின் பணத்தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்!

தொப்பை கொழுப்பைக் குறைக்க, உங்கள் உணவில் சரியான உணவுகளைச் சேர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவை முழுமையான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு உதவும்.

" உடல்நலம் சார்ந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். குறிப்பாக பசியைக் கட்டுப்படுத்தும், இடுப்பினைச் சுற்றினை கொழுப்பினை சேமிக்காத பல நட்பு உணவுகள் உள்ளன. அப்படி 5 உணவுகளைக் காண்போம்"என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் சாரு துவா கூறுகிறார். அவர் தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுப் பட்டியலைப் பகிர்ந்து கொள்கிறார்.

1. முழு தானியங்கள்:

இது ஏன் உதவுகிறது?: முழு தானியங்கள் நார்ச்சத்தினை உடலுக்கு அதிகளவில் தரக்கூடியவை. இது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது. முழு தானியங்களின் தினசரி மூன்று பரிமாணங்களை உட்கொள்வது, குறைந்த உடல் நிறை குறியீட்டெண்ணை (பிஎம்ஐ) பராமரிப்பது முக்கியமானது. இந்த தானியங்களில் கால்சியம், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதை எப்படி சேர்ப்பது?: கோதுமை, டாலியா, ஓட்ஸ், பழுப்பு அரிசி, சீமைத்தினை, தினை போன்ற முழு தானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளை அரிசிக்குப் பதில் பழுப்பு அரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதில், ஓட்ஸ் போன்ற கஞ்சிகளைக் குடிக்கலாம்.

2. கிரீன் டீ:

இது ஏன் உதவுகிறது?: ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேட்டசின்கள் நிறைந்த கிரீன் டீ, உடல் எடைக் குறைப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. உடலில் இருக்கும் கொழுப்பினை எரிக்கிறது. இடுப்பில் இருக்கும் கொழுப்பினை சீரமைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

அதை எப்படி சேர்ப்பது?: உங்கள் வழக்கமான சூடான பானங்களுக்குப் பதில் கிரீன் டீயாக மாற்றி, நாள் முழுவதும் 2-3 கப் குடிப்பதை நோக்கமாகக் கொள்ளுங்கள். இந்த இடமாற்றம் பால் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்து, உங்கள் இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக்குறைக்கும்.

3. மீன்:

இது ஏன் உதவுகிறது?:  கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவை உடலுக்குத்தேவையான நல்ல கொழுப்புகளை எடுத்துக்கொண்டு, கெட்ட கொழுப்பினை அகற்ற உதவுகிறது.

அதை எப்படி சேர்ப்பது?: வறுத்த காய்கறிகள் அல்லது சூடான சீமைத்தினை சாலட் மூலம் வறுக்கப்பட்ட அல்லது வேகவைத்த கொழுப்பு மீன்களை தயார் செய்து உண்ணுங்கள்.

4. இலவங்கப்பட்டை போன்ற சில மசாலாப் பொருட்கள்:

இது ஏன் உதவுகிறது?: இலவங்கப்பட்டை போன்ற சில மசாலாப் பொருட்கள் இன்சுலின் சுரப்பியினை மேம்படுத்துகின்றன. ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன. தொப்பையைக் குறைக்க உதவுகின்றன. 

அதை எப்படி சேர்ப்பது?: காலை ஓட்ஸ் கஞ்சி குடிக்கும்போது இலவங்கப்பட்டை சேர்த்து குடிக்கலாம். காபி அல்லது தேநீரில் சேர்த்து குடிக்கலாம். உடல் எடையைக் குறைக்க, சுவையான உணவுகளில் சேர்க்கலாம்.

5. கீரைகள்:

இது ஏன் உதவுகிறது?:  கீரைகள் எடை இழப்புக்கு சிறந்தவை. இந்த கீரைகளில் உள்ள வைட்டமின் கே எடை இழப்பைத் தூண்டுகிறது. இது எடை இழப்பிற்குப் பயன்படும் விருப்பமான உணவாக அமைகிறது.

அதை எப்படி சேர்ப்பது?: கீரைகளை சாலட்கள், சூப்கள், பொரியல், சாண்ட்விச்கள், ஜூஸ்களாக உணவில் சேர்க்கலாம்.

இந்த ஐந்து தொப்பையைக் குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதன்மூலம், பருவகால மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடலில் நீரேற்றம் ஆகியவை உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.