தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fish Pickle: உச்சிப் பொட்டு தெறிக்கும் சுவை.. ஈஸியா செய்யலாம் மீன் ஊறுகாய்!

Fish Pickle: உச்சிப் பொட்டு தெறிக்கும் சுவை.. ஈஸியா செய்யலாம் மீன் ஊறுகாய்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 22, 2023 11:28 AM IST

சுவையான மீன் ஊறுகாய் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

மீன் ஊறுகாய்
மீன் ஊறுகாய்

ட்ரெண்டிங் செய்திகள்

உணவுகளில் இரண்டு வகை உண்டு. அசைவ உணவு, இரண்டு சைவ உணவு. பொதுவாகப் பலர் அசைவ விரும்பிகளாக இருப்பார்கள். முன்பு இருப்பது போல் தற்போது அசைவ உணவுகள் சத்து மிகுந்ததாக இருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான்.

இன்று வரை சத்தான அசைவ உணவுப் பட்டியலில் மீன் மட்டும் இருந்து வருகிறது. உடலுக்கு அதிக தேவையான சத்துக்களைக் கொடுப்பதில் மீன் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்த வகையில் அசைவப் பிரியர்களுக்கு என ஒரு ரெசிபி இங்கே கொடுக்கப் போகின்றோம். அதுதான் மீன் ஊறுகாய். மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • முள் இல்லாத மீன் அரை கிலோ
  • அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி
  • ஒரு மேஜை கரண்டி வெந்தய பொடி
  • நான்கு மேஜை கரண்டி மிளகாய்த் தூள்
  • ஒரு பூண்டு
  • ஒரு சிறிய துண்டு
  • அரை கப் வினிகர்
  • ஒரு மேஜை கரண்டி கடுகு
  • கறிவேப்பிலை
  • தேவையான அளவு நல்லெண்ணெய்

மீன் ஊறுகாய் செய்முறை

  • முதலில் மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சதுர வடிவில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சி மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கழுவிய மீனில் ஈரத்தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு எல்லாம் சேர்த்து அனைத்து இடங்களிலும் படும்படி கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் ஊற வைத்திருக்கின்ற மீனைப் போட்டு வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன்பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கடுகு, கருவேப்பிலை, நறுக்கிய இஞ்சி பூண்டு உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  • அதன்பின்னர் அதில் மிளகாய் பொடி, உப்பு, வெந்தைய பொடி சேர்த்துக் கிளறி அதனுடன் வறுத்து வைத்திருக்கக்கூடிய மீன் துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் கிளற வேண்டும்.
  • அதற்குப் பிறகு அதில் அரை கப் வினிகர் சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மீன் ஊறுகாய் தயார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்