Kovakkai Poriyal : தேமல் இருக்கா.. இந்த காயில் பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க! டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும்!-kovakkai poriyal if you are themal try eating this kail poriyal senchu the taste will be amazing - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kovakkai Poriyal : தேமல் இருக்கா.. இந்த காயில் பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க! டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும்!

Kovakkai Poriyal : தேமல் இருக்கா.. இந்த காயில் பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க! டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 04, 2024 04:41 PM IST

Kovakkai Poriyal சத்துக்கள் நிறைந்த கோவக்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலர்ஜியை எதிர்த்து போராடும். புற்று நோயை தடுக்க உதவும். நரம்பு மண்டலத்தை பாதுகாக்க வேண்டும். இதேபோல் இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது. தேமல் பிரச்சனையும் சரி செய்யும்.

Kovakkai Poriyal : தேமல் இருக்கா.. இந்த காயில் பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க! டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும்!
Kovakkai Poriyal : தேமல் இருக்கா.. இந்த காயில் பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க! டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும்!

40 மில்லி கிராம் கால்சியமும், 30 மில்லி கிராம் பாஸ்பரஸும், 1.4 மில்லி கிராம் இரும்பு சத்தும், 0.07 மில்லிகிராம் தையமின் என்ற வைட்டமினும், 0.08 மில்லி கிராம் ரிபோப்ளாவின் என்ற வைட்டமினும், 59 மில்லி கிராம் போலிக் ஆசிடும், 1.56 மில்லி கிராம் கரோடீனும், 18 கிலோ கிராம் கலோரியும் இருக்கிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த கோவக்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலர்ஜியை எதிர்த்து போராடும். புற்று நோயை தடுக்க உதவும். நரம்பு மண்டலத்தை பாதுகாக்க வேண்டும். இதேபோல் இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது. தேமல் பிரச்சனையும் சரி செய்யும். இத்தனை சத்துக்கள் கொண்ட கோவக்காயில் டேஸ்ட்டான பொரியல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

கோவக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்

கோவக்காய் – கால் கிலோ

எள் – 2 ஸ்பூன்

பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்

வேர்க்கடலை – 2 ஸ்பூன்

மிளகாய் வத்தல் – 3

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்தம்பருப்பு– அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை கப்

பெரிய வெங்காயம் – 1

கோவக்காய் பொரியல் செய்முறை

கோவக்காயை முதலில் சுத்தகமாக நீள வாக்கில் வெட்டி கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் மிளகாய் வத்தல் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு ஸ்பூன் எள்ளையும் சேர்த்து வறுக்க வேண்டும்.

இரண்டும் பொன்னிமாகும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் கோவக்காய், சேர்க்க வேண்டும். அதில் கொஞ்சமாக உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கோவக்காயை நன்றாக வேக விடவேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயை மூடிவைத்து வேகவிடவேண்டும்.

இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள், மற்றும் வரமிளகாய், தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் கோவக்காய் வெந்தவுடன், அதில் நாம் அரைத்த அரைத்து வைத்துள்ள இந்தப்பொடியை சேர்த்து கலந்துவிடவேண்டும்.

இந்த சமயத்தில் உப்பை சரி பார்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் டேஸ்ட்டான கோவைக்காய் பொரியல் ரெடி.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.