Instant Murukku : ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. பொட்டுக்கடலை முறுக்கு செய்யலாம? 15 நிமிடம் போதும்!
சுவையான பொட்டுக்கடலை முறுக்கு எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம்.
பொட்டுக்கடலை முறுக்கு
கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமிக்கு நாம் செய்யும் உணவுகளில் முறுக்கு ஒன்று. இதோ ஒரு சூப்பர் ஈஸியான முறுக்கு, அது மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கிறது!!
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 3 கப்
பொட்டுக்கடலை - 3/4 கப்
கருப்பு எள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1.5 தேக்கரண்டி
வெதுவெதுப்பான நீர் - 2 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பொரிப்பதற்கு எண்ணெய்.
செய்முறை
முதலில் பொட்டுகடலையை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.பின்னர் அதனை ஜலித்து கொள்ளுங்கள்.
அதில் அரிசி மாவு, கருப்பு எள், மிளகாய் தூள்,பெருங்காயம்,உப்பு,வெண்ணெய் சேர்த்து கலக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீர் சேர்த்து முறுக்கு ஏற்ற பதத்தில் மாவை பிசையவும்.
இப்போது முறுக்கு அச்சில் அந்த மாவை போட்டு முறுக்கு பிழிந்து அதை மிதமான தீயில் பொறித்து எடுக்கவும். அவ்வளவு தான் பொட்டுக்கடலை முறுக்கு ரெடி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்