Peanut Benefits :ஆண்மையை அதிகரிக்க உதவும் நிலக்கடலையில் இத்ததனை நன்மைகளா
Pexels
By Pandeeswari Gurusamy Aug 01, 2024
Hindustan Times Tamil
100 கிராம் கடலையில், 564 கலோரிகள், ஈரப்பதம் 6 சதவீதம், புரதச்சத்து 26 கிராம், கார்போஹைட்ரேட் 18.6 கிராம், கரையக்கூடிய சர்க்கரை 4.5 சதவீதம், நார்ச்சத்துக்கள் 2.1 சதவீதம், கொழுப்பு 47.5 கிராம், எண்ணெய் 48.2 சதவீதம், ஸ்டார்ச் 11.5 சதவீதம் உள்ளது. கால்சியம் 69 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 401 மில்லிகிராம், மெக்னீசியம் 168 மில்லிகிராம், வைட்டமின் பி 3 17.2 மில்லிகிராம், வைட்டமின் பி1 1.14 மில்லிகிராம் உள்ளது.
Pexels
ஈசிமா உள்ளிட்ட பல சரும நோய்களை கடலை தீர்க்கிறது. இதில் ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து காக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நமது உடலில் உள்ள கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.
Pexels
இதில் உள்ள ஆரோக்கியமான அன்சாச்சுரேடட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், தியாமின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.
Pexels
கடலை மூளைக்கு மிகவும் நல்லது. இதில் பாலி அன்சாச்சுரேடட் கொழுப்பு, மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு, வைட்டமின் பி3 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூளையை பலப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் நினைவாற்றலை பெருகச் செய்கிறது.
Pexels
கடலையில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவற்றுக்கு உதவுகிறது. ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள், இனப்பெருக்க செல்களின் தன்மையை அதிகரிக்கிறது.
Pexels
பெண்களின் உடலில் மெக்னீசியச்சத்து குறைபாடு இருந்தாலும், அது கருவுறுதலை தடுக்கும். கடலையில் உள்ள ஃபோலேட்கள், கருத்தரிக்கும் முன்னரும், பின்னரும் நன்மை கொடுக்கிறது. இது எனர்ஜி நிறைந்த ஒன்று என்பதால், இது அதிக நேரம் உங்களை திருப்தியாக வைக்கிறது. பசி மேலாண்மைக்கு உதவுகிறது. இதனால் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிட்டு உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. இதில் உள்ள புரதம் உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது.
Pexels
கடலையில் டிரிட்டோஃபான் உள்ளது. இது செரோட்டினின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்க உதவும் அமினோ அமிலம் ஆகும். இது மனஉளைச்சலை போக்க உதவுகிறது. எனவே இதை கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் செரோட்டினின் அளவை அதிகரித்து மனஉளைச்சலை போக்குகிறது.
Pexels
உடல் எடை அதிகரிக்க விரும்பாமலும், எடை இழப்பு முயற்சியிலும் ஈடுபடுபவர்களாக இருப்பீர்களானால் குளிர்காலத்தில் நீங்கள் எந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்