தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kambu Laddu Makes Womens Body Iron Try To Eat Only This One Laddu Every Day

Kambu Laddu : பெண்களின் உடம்பை இரும்பாக்கும்! தினம் இந்த ஒரு லட்டு மட்டும் சாப்பிட்டு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Apr 01, 2024 11:51 AM IST

Kambu Laddu : சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது. இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.

Kambu Laddu : பெண்களின் உடம்பை இரும்பாக்கும்! தினம் இந்த ஒரு லட்டு மட்டும் சாப்பிட்டு பாருங்க!
Kambu Laddu : பெண்களின் உடம்பை இரும்பாக்கும்! தினம் இந்த ஒரு லட்டு மட்டும் சாப்பிட்டு பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

கருப்புட்டி – 100 கிராம் (உடைத்தது)

மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்

சுக்குப்பொடி – ஒரு ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

செய்முறை

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, இதில் கம்பை சேர்த்து அரைமணி நேரம் மூடிவைத்து ஊறவைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் உலர்த்த வேண்டும். நிழலிலே ஃபேனில் உலர்த்திக்கொள்ளலாம்.

உலர்ந்த கம்பை எடுத்து, மிக்ஸியில் பொடித்து, சலித்து மாவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கம்பி பாகு பதம் வரும் வரை பாகு காய்ச்சி எடுக்கவேண்டும்.

பொடித்து, சலித்து வைத்துள்ள கம்பு மாவில், காய்ச்சிய கருப்பட்டி பாகு, மிளகுத்தூள், சுக்குப்பொடி சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

நெய் சேர்த்து திரட்டி எடுத்து லட்டுகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

கம்பில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.

கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை பொறுமையான செரிமானம் நடைபெற உதவுகிறது. இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்கிறது. எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது – இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.

சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது. இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.

அல்சர் மற்றும் அசிடிட்டிக்கு மருந்தாகிறது – வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது – சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது – கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.

எலும்பை வலுவாக்குகிறது – கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்து உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது.

கொழுப்பை குறைக்கிறது – கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தை உணவு – கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.

உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது.

குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்