உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும் 8 நச்சுப் பழக்கங்கள் இவைதான்!
உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கும் 8 நச்சுப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றின் ஆரோக்கியத்தைப்போக்கும் நச்சுப்பழக்கங்கள் என்னவென்றும், அவற்றை எப்படி தடுப்பது என்றும் பாருங்கள். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதுதான் நீங்கள் என்பது மிகுந்த உண்மை நிறைந்த வார்த்தைகள், இது நீங்கள் சாப்பிடும் உணவை மட்டும் குறிப்பது கிடையாது. நீங்கள் என்ன பழக்கங்களைக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் குறிக்கிறது. இவையனைத்தும் உங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே இந்த நச்சுப்பழக்கங்களை நீங்கள் தவிர்த்தால், அது உங்கள் உடலில் ஒட்டுமொத்தமாக எண்ணற்ற ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. இது உங்கள் குடல் கோளாறுகளை போக்குகிறது.
அன்றாட வழக்கத்தை மாற்றுவது
நீங்கள் அன்றாடமாக ஒரு வழக்கத்தை வைத்துக்கொள்ளவில்லையென்றால், அது உங்கள் உடலின் உட்புற கடிகாரத்தைப் பாதிக்கிறது. அது உங்கள் வயிற்றில் எத்தனை சிறப்பான செரிமானம் நடந்தாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சாப்பாட்டை தவிர்ப்பது, நேரம் தவறி சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பாடு உட்கொள்ளாமல் இருப்பது, இதனால் வயிற்றுக்கோளாறுகள், செரிமான பிரச்னைகள் மற்றும் ஆசிட் எதிர்ப்புகள் நடக்கிறது.
இரவு
இரவு தாமதமாக உறங்கச் செல்வது மற்றும் உணவு உட்கொள்வது இரண்டும் உடலுக்கு எண்ணற்ற தீமைகளைக் கொண்டுவருகிறது. இதனால் பெரிய கோளாறுகள் ஏற்படாததுபோல் தோன்றலாம். ஆனால் உறக்கம் தடைபட்டால், அது செரிமான ஹார்மோன்கள் உற்பத்தியைக் குறைக்கிறது. குடல் பாக்டீரியாக்களின் சமஅளவைப் போக்குகிறது. உறக்கமின்மையால் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இது உங்கள் வயிறு கோளாறுகளை மோசமாக்குகிறது. இது உங்கள் வயிற்றுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொடுக்கும் கேட்டைக் கொடுக்கிறது.