‘ஜிங்கில் பெல்ஸ், ஜிங்கில் பெல்ஸ்‘ கிறிஸ்துமஸ் வந்தாச்சு; இதோ இன்று முதல் விதவிதமான கேக் ரெசிபிக்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘ஜிங்கில் பெல்ஸ், ஜிங்கில் பெல்ஸ்‘ கிறிஸ்துமஸ் வந்தாச்சு; இதோ இன்று முதல் விதவிதமான கேக் ரெசிபிக்கள்!

‘ஜிங்கில் பெல்ஸ், ஜிங்கில் பெல்ஸ்‘ கிறிஸ்துமஸ் வந்தாச்சு; இதோ இன்று முதல் விதவிதமான கேக் ரெசிபிக்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 03, 2024 01:35 PM IST

இன்று முதல் விதவிதமான கேக் ரெசிபிக்கள் இங்கு பகிரப்படும்.

‘ஜிங்கில் பெல்ஸ், ஜிங்கில் பெல்ஸ்‘ கிறிஸ்துமஸ் வந்தாச்சு; இதோ இன்று முதல் விதவிதமான கேக் ரெசிபிக்கள்!
‘ஜிங்கில் பெல்ஸ், ஜிங்கில் பெல்ஸ்‘ கிறிஸ்துமஸ் வந்தாச்சு; இதோ இன்று முதல் விதவிதமான கேக் ரெசிபிக்கள்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – அரை கப்

சர்க்கரை – 2 கப்

மோர் – ஒன்றரை கப்

வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்

மைதா மாவு – 2 கப்

கோகோ பவுடர் – ஒரு கப்

பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – கால் ஸ்பூன்

சாக்கோ சிப்ஸ் – கால் கப்

இன்ஸ்டன்ட் காபித்தூள் – ஒரு ஸ்பூன்

வெண்ணெய் – ஒரு ஸ்பூன்

பட்டர் ஷீட் – 1

சுகர் சிரப்

கிரிம் செய்ய

ஹெவி கிரீம் – 2 கப்

ஐசிங் சுகர் – ஒரு கப்

கோகோ பவுடர் – ஒரு கப்

வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சர்க்கரை, மோர், வெண்ணிலா எசன்ஸ் என அனைத்தும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவேண்டும். அடுத்து ஒரு சல்லடை வைத்து அதில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து, ஏற்கனவே கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து கட்டிப்படாமல் நன்றாக கலந்துகொள்ளவேண்டும். மாவு நல்ல தோசை மாவு பதத்துக்கு வரும் வரை கரைத்துக்கொள்ளவேண்டும். கெட்டிபடாமல் கலக்கவேண்டும்.

ஒரு நான்ஸ்டிக் ஃப்ளாட் பாத்திரம் அல்லது கடாயை எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சுற்றிலும் நன்றாக வெண்ணெய் தடிவி, அடியில் பட்டர் ஷீட்போட்டு இந்த மாவை சேர்த்து நன்றாக தட்டி நேரடியாக அடுப்பில் வைத்துவிடவேண்டும்.

அடுப்பை முற்றிலும் குறைத்து, மூடி வைத்து 60 நிமிடங்கள் வைக்கவேண்டும். கேக் நன்றாக வெந்து வரும். ஒரு மணிநேரம் கழித்து டூத் பிக் பரிசோதனை செய்துவிடடு, கேக் வெந்து விட்டால் இறக்க வேண்டும்.

நன்றாக ஆறியவுடன் தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் நன்றாக டூத் பிக் வைத்து குத்தி சுகர் சிரப்பை விடவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் ஹெவி கிரீம், ஐஸிங் சுகர், கோகோ பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும். இதை பீட்டர் வைத்து பீட் செய்துகொள்ளலாம். பீட்டர் இல்லாதவர்கள் மிக்ஸியில் அடித்து எடுத்துக்கொள்ளலாம். இதை அப்படியே கேக்கின் மீது தடவி சிறிது நேரம் செட்டானவுடன் சாப்பிட்டால் சூப்பர் சுவையான சாக்லேட் கேக் வீட்டிலே தயார். இந்த கிறிஸ்துமஸ்க்கு இதை செய்து விடலாமா?

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.