Yoga For Growing: உயரத்தை கூட்ட யோகா செய்தால் போதும்! என்ன யோகா தெரியுமா?
Yoga For Growing: உடல் வளர்ச்சிக்கு சரியான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையே தேவைப்படுகிறது. இதில் உடற்பயிற்சி போன்றவையும் அடங்கும்.

உடல் வளர்ச்சிக்கு சரியான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையே தேவைப்படுகிறது. இதில் உடற்பயிற்சி போன்றவையும் அடங்கும். அனைத்தையும் சாத்தியப்படுத்தும் இந்த நவீன உலகில் உடலின் உயரத்தை கூட்டுவதும், யோகா போன்ற செயல்படுகளால் சாத்தியப்படுத்த முடியும் என நிரூபணம் ஆகியுள்ளது. நமது உயரத்தை கூட்ட முயல்கிறோம். மேலும் இதற்கென நடிகர்கள், மாடல் விளம்பரத்தில் நடிப்பவர்கள் என பலர் உயரத்தை கூட்ட பல அறுவை சிகிச்சை முறைகளையும் செய்து கொள்கின்றனர்.
யோகா மற்றும் உடற்பயிற்சி
யோகா என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய ஒரு வாழ்க்கை முறை மற்றும் அதன் பயிற்சியாளர்களால் காலங்காலமாக முழுமையாக கற்பிக்கப்படு வருகிறது. யோக ஒழுக்கம் என்பது ஒரு தனிநபரின் உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நீதியான வாழ்க்கை மற்றும் மனம்-உடல் பயிற்சிகளின் பயிற்சியைக் குறிக்கிறது.
யோகா மிகவும் பயனுள்ள பயிற்சியாகும். சரியாகவும் விடாமுயற்சியுடன் யோகா செய்யும்போது குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடையலாம். யோகா ஆசனங்கள் அல்லது பயிற்சிகள் ஒரு நபரின் உடல், மனம் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. யோகா உடலைச் சுத்தப்படுத்துவதோடு ஒரு நபரின் மன திறன்களை மேம்படுத்தும் ஒட்டுமொத்த விளைவையும் ஏற்படுத்தும். இந்த வகையான உடற்பயிற்சி நேரடியாக ஒரு நபரின் உயரத்தை அதிகரிக்கும். இது நிச்சயமாக அனைத்து உறுப்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஆரோக்கியமான செல்கள் மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
