International Day of Happiness 2024: சே சீஸ்! அனைவரும் மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்! இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!
International Day of Happiness 2024 : எந்த வயதினரையும், ஜக்கிய நாடுகள் அழைக்கிறது. ஒவ்வொரு வகுப்பறையும், வணிக நிறுவனமும், அரசும் சேர்ந்து மகிழ்ச்சி தினத்தை கொண்டாட வேண்டும்.
சர்வதேச மகிழ்ச்சி தினம் என்றால் என்ன?
இன்று நாம் மகிழ்ந்திருக்க வேண்டிய நாள், ஆம் மகிழ்ந்திருப்பதுதான் மனிதனின் அடிப்படையான இலக்கு. ஜக்கிய நாடுகள் பொது சபை இந்த நாளை அங்கீகரித்து, அனைவரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறது. சமமான, அனைத்தையும் உள்ளடக்கிய, பொருளாதார வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் அனைவரின் நலனை ஊக்குவிக்கிறது.
அரசுகளும், சர்வதேச அமைப்புகளும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதன் மூலம் மகிழ்ச்சியை ஆதரிக்கும் நிலைகளில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் போன்ற கொள்கை கட்டமைப்பில் நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.
அமைதி மற்றும் சமூகநீதி கடைபிடிப்பதில் அரசுகள் முனைப்புடன் செயல்படவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரிகள், சட்ட மையங்கள் மற்றும் பொதுசேவையை வழங்கும் அமைப்புகளும் சமூக நீதியை கடைபிடித்து செயல்படவேண்டும். இவையனைத்தும் வாழ்வில் குறைந்தபட்ச திருப்தியை கொடுப்பதில் பங்கு வகிக்கின்றன. மக்கள் மீது சுமைகளை ஏற்றாமல் அரசுகள் செயல்படவேண்டும்.
எந்த வயதினரையும், ஜக்கிய நாடுகள் அழைக்கிறது. ஒவ்வொரு வகுப்பறையும், வணிக நிறுவனமும், அரசும் சேர்ந்து மகிழ்ச்சி தினத்தை கொண்டாட வேண்டும்.
உலக மகிழ்ச்சி தினத்தின் பின்னணி
ஜக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு தீர்மானம் 66/281, 2012ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக குறிப்பிடுகிறது. மகிழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நலன் என்பதே உலக இலக்கு. உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் வாழ்வில் அது மகிழ்ச்சியை நிலை நிறுத்த விரும்புகிறது. இதை அங்கீகரித்ததை உலக நாடுகளும் அதன் கொள்கைகளில் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பொதுக்கொள்கை நோக்கங்களில் அவர்களின் அங்கீகாரத்தின் முக்கியத்துவம். நிலையான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அனைத்து மக்களின் நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உள்ளடக்கிய, சமமான மற்றும் சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தையும் இது அங்கீகரித்துள்ளது.
இந்த தீர்மானம் பூடானால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நாடு தேசத்தின் வருவாயைவிட தேசத்தின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடாகும்.
மகிழ்ச்சி ஒன்றே நம் வாழ்வை இயக்குகிறது. நாம் வாழ்வில் பிடிமானமாக எதையாவது கொள்ள வேண்டுமென்றால், அது நமது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. அந்த மகிழ்ச்சி நமது வாழ்வை வழிநடத்தட்டும். நம்மிடம் ஆயிரம் உணர்வுகள் உள்ளது. ஆனால் அவை அனைத்திலும் முதன்மையானதும், சிறந்தது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் மட்டுமே, அதுவே அடுத்த நாளை நமக்கு சாத்தியமாக்குகிறது.
நாம் செய்யும் செயல்களில் மகிழ்ச்சி, நாம் விரும்பும் விஷயங்களில் மகிழ்ச்சி மற்றும் நாம் எதிர்பார்க்கும் விஷயங்களில் மகிழ்ச்சி, இவையனைத்தும்தான் நமக்கு நாளை என்ற ஒன்றை உறுதிப்படுத்துகின்றன. மனித இனம் உயிர்த்திருப்பதற்கு மகிழ்ச்சி என்ற ஒன்றுதான் உதவுகிறது அதுதான் நாளை என்ற ஒன்று அழகானது என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.
இன்றைய நாளில் கட்டாயம் மகிழ்ந்திருக்க வாழ்த்துங்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதை மட்டும் செய்யுங்கள். உங்களைப்பற்றிய புகார்களை புறந்தள்ளுங்கள். ஆனால் அதுகுறித்து உங்களிடம் விளக்கம் கொடுங்கள். உங்களின் மகிழ்ச்சி பன் மடங்காக பெருகும். நம்பிக்கையும், மகிழ்ச்சியும் இருகரங்கள். இனிய மகிழ்ச்சி தின வாழ்த்துக்கள். மகிழ்ச்சி தினத்தில் அதிகமாக மகிழ்ந்திருங்கள்.
டாபிக்ஸ்