தமிழ் செய்திகள்  /  Cricket  /  Former Newzealand Cricketer Ross Taylor Birthday Today

HT Cricket Special: நியூசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்திருக்கும் அதிரடி பேட்ஸ்மேன்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 08, 2024 07:00 AM IST

ரோஸ் டெய்லர் ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் நியூசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்த வீரர் லிஸ்டில் இருந்து வருகிறார். இதன்மூலம் அவர் அணிக்காக அளித்த பங்களிப்பு எவ்வளவு அதிகம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர்
நியூசிலாந்து அணியின் முன்னாள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர்

ட்ரெண்டிங் செய்திகள்

நியூசிலாந்தின் உள்ளூர், இங்கிலாந்தின் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை நிருபித்த இவர், 2006ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான டெய்லர், 2007ஆம் ஆண்டில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

அதிரடியான பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதில் வல்லவரான டெய்லர், பல போட்டிகளில் நிலைத்து நின்று பேட் செய்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.

சச்சின் டென்டுல்கர், வினோத் காம்பிளி, சனத் ஜெய்சூர்யா ஆகிய வீரர்களுக்கு அடுத்தபடியாக தனது பிறந்தநாளில் சதமடித்த வீரராக டெய்லர் இருந்து வந்துள்ளார். சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் ஒரு நாள் போட்டியில் அதிக சதமடித்தவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்

அதேபோல் இவர் விளையாடி காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராக சதமடித்த இவர், முதல் முறையாக இந்த சாதனையை நிகழ்த்திய நியூசிலாந்து கிரிக்கெட்டர் என்ற தனித்துவ சாதனையும் படைத்தார்

2019 உலகக் கோப்பை தொடரின்போது நியூசிலாந்து அணிக்காக 400வது சர்வதேச போட்டியில் களமிறங்கினார். இதன்மூலம் நியூசிலாந்து அணியில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவராக உருவெடுத்தார். இப்போது வரை நியூசிலாந்துக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக இருந்து வருவதுடன், அதிக சர்வதேச ரன்கள் அடித்தவராகவும் உள்ளார்.

இவர் விளையாடிய 100வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 100வது டெஸ்ட் வெற்றியை பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்த விஷயமாக அமைந்துள்ளது. டெஸ்ட், வெள்ளை பந்து கிரிக்கெட் என மொத்தம் 40 சதங்களை அடித்திருக்கும் டெய்லர் 2021இல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் சீசன் தொடங்கிய 2008இல் இருந்து 2010 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடினார். பின்னர் 2011இல் ராஜஸ்தான் ராயல்ஸ், 2012இல் டெல்லி டேர் டெவில்ஸ், 2013இல் புனே வாரியர்ஸ், 2014இல் மீண்டும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

2021இல் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிக்கான ரன்களை அடித்து நியூசிலாந்தின் முதல் ஐசிசி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்த ரோஸ் டெய்லருக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point