Gardening Tips: என் வீட்டுத்தோட்டத்தில்! வீட்டில் தோட்டம் அமைக்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips: என் வீட்டுத்தோட்டத்தில்! வீட்டில் தோட்டம் அமைக்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

Gardening Tips: என் வீட்டுத்தோட்டத்தில்! வீட்டில் தோட்டம் அமைக்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

Suguna Devi P HT Tamil
Sep 23, 2024 10:10 AM IST

Gardening Tips:வீடுகளில் முதன் முதலாக தோட்டம் வைப்பவர்கள், செடிகள் நன்றாக வளர வில்லையெனில் சோர்ந்து போய் தோட்டம் வைக்கும் திட்டத்தையே மொத்தமாக கைவிட்டு விடுகின்றனர். இது போன்ற சமயங்களில் சில டிரிக்ஸ்களை தெரிந்து கொண்டால் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

 Gardening Tips: என் வீட்டுத்தோட்டத்தில்! வீட்டில் தோட்டம் அமைக்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
Gardening Tips: என் வீட்டுத்தோட்டத்தில்! வீட்டில் தோட்டம் அமைக்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

பொது இடங்களில் மரம், செடிகள் வளர்ப்பதை போல அல்லாமல் வீடுகளில் வளர்க்கப்படும் செடிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவை அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும். இதற்கான அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டு தோட்டம் அமைக்க செல்வது சிறந்த செயல்முறையாகும். 

மண் வளப்படுதத்தல் 

தோட்டம் அமைப்பதற்கு முதன்மையான ஆதாரம் மண், இந்த மண் மிகவும் வளமானதாக இருக்க  வேண்டும். தொட்டியில் வளர்க்கப்படும் செடிகளுக்கு, அடிதொட்டியினுள் மண்ணை தளர்வாக இருக்குமாறு போட வேண்டும். அதே போல தரையில் இருக்கும் மண்ணையும் தோண்டி, சற்று தளர்வு படுத்தி தயார் செய்ய வேண்டும். இதன் மூலம் மண்ணிற்குள் ஆக்ஸிஜன் எளிமையாக செல்ல முடியும்.

வளமான மண் இருத்தலும் செடியின் நல்ல வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். தோட்டம் அமைப்பதற்கு முன்னதாக ஒரு முறை மண்ணை பரிசோதித்து பார்ப்பது முக்கியமான ஒன்றாகும். இதன் வாயிலாக மண்ணின் தரத்தை அறிந்த அதனை உயர்த்த தேவையான செயல்களில் ஈடுபடலாம். மேலும் மண்ணில் இயற்கை உரங்களை முன் கூட்டியே போடுவதும் மண் வளத்தை மேம்படுத்த உதவுகிறது. 

சூரிய ஒளியின் முக்கியத்துவம் 

ஒரு செடி வளர்வதற்கு மற்றொரு முக்கியமான ஆதாரம் என்றால், அது சூரிய ஒளிதான். சில தாவரங்கள் சூரிய ஒளியை முக்கிய ஆதாரமாக கொண்டு வளர்கின்றன. சில தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவைப்படுவதில்லை. இதனை கண்டறிந்து செடிகளை தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு உங்களது வீடுகளில் தோட்டம் அமைக்கும் இடத்தில் அதிகம் நேரம் சூரிய ஒளி விழும் என்றால், அதற்கு ஏற்றவாறு தாவரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக சூரிய ஒளியால் வாடி விடும் செடிகளை தவிர்ப்பது நல்லது. 

அதை போல காற்று பலமாக வீசும் இடங்களை தவிர்ப்பதும் நல்லது. சில செடிகள் வளர ஆரம்பிக்கும் போது மிகவும் பலம் இல்லாமல் இருக்கலாம். இவைகளினால் பலத்த காற்றை தாங்கி வளர முடிவதில்லை.  செடியை நடுவதற்கான கன்றை எடுத்து வந்த உடனே நடுவது சிறந்த வளர்ச்சியை தரும். ஏனெனில் ஒரு செடியை வேகமாக நடும் போது அதனுள் உயிர் செல்கள் செயல்பாட்டில் இருக்கும். இது செடியை ஆரோக்கியமாக வளர உதவி புரிகிறது. நட வேண்டிய செடியை காய விடுவது அதன் வளரும் செல்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. 

உங்கள் வீடுகளில் மண்ணில் வளர்க்கக்கூடிய காய்கறிகள், பூக்கள், கொடிகளை மட்டும் தெரிந்து வைத்து தோட்டம் அமைக்க தொடங்குங்கள். இது அந்த செடிகளை நன்றாக வளர உதவி கரமானதாக இருக்கு. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.