Keerai: மகப்பேறு தரும் கீரை… சத்துக்களை அள்ளித்தரும் கில்லியான கீரைகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Keerai: மகப்பேறு தரும் கீரை… சத்துக்களை அள்ளித்தரும் கில்லியான கீரைகள்

Keerai: மகப்பேறு தரும் கீரை… சத்துக்களை அள்ளித்தரும் கில்லியான கீரைகள்

Marimuthu M HT Tamil
Aug 23, 2023 06:08 PM IST

தமிழ் மரபில் கீரைகளுக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு. அத்தகைய மருத்துவகுணமிக்க கீரைகளைப் பற்றி காண்போம்.

மகப்பேறு தரும் கீரை… சத்துக்களை அள்ளித்தரும் கில்லியான கீரைகள்
மகப்பேறு தரும் கீரை… சத்துக்களை அள்ளித்தரும் கில்லியான கீரைகள்

அத்தகைய கீரைகள் பல உடலின் பல்வேறு பிணிகளுக்கு உதவுபவை. இதனை சித்த மருத்துவ நூல்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் சில கீரைகள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் காணலாம்.

முருங்கைக் கீரை: கீரைகளில் அதிக இரும்புச்சத்து கொண்ட கீரை, முருங்கைக் கீரையாகும். இந்த கீரையில் உணவில் சேர்த்து வந்தால் கண்கள் மற்றும் உடல் பலம் பெறும். 

கரிசலாங்கண்ணி கீரை: பொன் போன்ற மேனிக்கு கரிசலாங்கண்ணி என்பர். அப்படி கிராமத்து சொலவடையின்படி, திகழும் கரிசலாங்கண்ணி கீரை, சளி மற்றும் இருமலை குணமாக்கப்பயன்படுகிறது.

அரைக்கீரை: திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள்,  அரைக்கீரையினை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்து உண்டு வந்தால், கருப்பை பலப்படும். குழந்தை தங்கும். அதேபோல், ஆண்களுக்கு அரைக்கீரை ஆண்மைக்குறைவினைப் போக்கும் தன்மை கொண்டது.

குப்பைக்கீரை:  குப்பைக்கீரையில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளது. சிலருக்கு உடலில் வரும் புண்கள் ஆறாமல் பல நாட்கள் இருக்கும். அத்தகைய புண்கள் ஆறுவதற்கு, வைட்டமின் சி நிறைந்துள்ள குப்பைக்கீரையினை உண்டால் விரைவில் சரியாகும். காயம் ஆறும்.  

அகத்திக்கீரை: அகத்திக்கீரை உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லவை. அகத்திக்கீரையில் அதிகளவு இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால்,  அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும், இது எளிதில் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.