தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vetrilai Laddu: அசைவம் சாப்பிட்டால் வயிறு மந்தமா.. செரிமானத்தை தூண்ட இதோ வெற்றிலை லட்டு!

Vetrilai Laddu: அசைவம் சாப்பிட்டால் வயிறு மந்தமா.. செரிமானத்தை தூண்ட இதோ வெற்றிலை லட்டு!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 31, 2023 10:30 AM IST

ருசியான நான் வெஜ் சாப்பாட்டிற்கு பிறகு வெற்றிலை லட்டு செரிமானத்தை நன்றாக தூண்ட உதவும்.

வெற்றிலை லட்டு
வெற்றிலை லட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வெற்றிலை - 15

ஐஸ்கட்டி

தண்ணீர் - தேவையான அளவு

கடலை மாவு -1/4 கிலோ

சர்க்கரை - 1/4 கிலோ

நெய் - தேவையான அளவு

முந்திரி - தேவையான அளவு

திராட்சை - தேவையான அளவு

பாதாம் - தேவையான அளவு

தேங்காய் துருவல்

செய்முறை

15 வெற்றிலையை எடுத்து நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 4 ஐஸ் கட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். வடி கட்டி எடுத்த வெற்றிலை சாற்றில் கால் கிலோ கடலை மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும். இப்போது கால் கப் கடலை மாவிற்கு கால் கப் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சர்க்கரையுடன் கால் கப்பு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். வெற்றிலை தண்ணீர் மீதி இருந்தால் அதை சேர்த்து கொள்ளலாம். கம்பி பதம் தேவை இல்லை சீனி பாகு பிசு பிசுன்னு இருந்தால் போதும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு பூந்தி கரண்டியில் மாவை விட்டு பூந்தி போட வேண்டும். பூந்தி வெந்து எடுத்த உடன் அதை சூடான பாகில் போட்டு கலந்து விட வேண்டும்.

10 நிமிடம் கழித்து பூந்தியை நன்றாக பிசைய வேண்டும்.வாணலியில் நெய் விட்டு அதில் தேவையான முந்திரி திராட்சை, வறுத்து எடுத்து அதை பூந்தியில் போட்டு விட வேண்டும். பிறகு நன்றாக கிளறி லட்டு பிடித்து கொள்ள வேண்டும். இதை துருவி வைத்த தேங்காய் மீது லேசாக பிரட்டி எடுக்கலாம். தேங்காய் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்.

ருசியான நான் வெஜ் சாப்பாட்டிற்கு பிறகு வெற்றிலை லட்டு செரிமானத்தை நன்றாக தூண்ட உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்