Idly : கொழுக் மொழுக்கென பஞ்சு போல இட்லி வேண்டுமா.. இந்த பக்குவத்தில் மாவு அரைச்சு பாருங்க.. 2 இட்லி அதிகமா கேட்பாங்க!
Idly : இட்லி மாவு பதம் சரியாக இல்லாவிட்டால் அது கல் போன்று மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் இட்லி என்றாலே அலரும் நிலை உள்ளது. அப்படி இல்லாமல் உங்கள் இட்லி பஞ்சு போல கொழுக் மொழுக்கென வெண்மையான இருக்க வேண்டுமா இப்படி செஞ்சு பாருங்க. ருசியும் அருமையாக இருக்கும்.
Idly : பெரும்பாலான வீடுகளில் தினமும் இட்லி தோசைதான் காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யப்படுகிறது. பொதுவாக இட்லி சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு. அதனால் தான் உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு இட்லி கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இட்லி மாவு பதம் சரியாக இல்லாவிட்டால் அது கல் போன்று மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் இட்லி என்றாலே அலரும் நிலை உள்ளது. அப்படி இல்லாமல் உங்கள் இட்லி பஞ்சு போல கொழுக் மொழுக்கென வெண்மையான இருக்க வேண்டுமா இப்படி செஞ்சு பாருங்க. ருசியும் அருமையாக இருக்கும்.
இட்லி மாவு அரைக்க தேவையான பொருட்கள்
இட்லி - 800 கிராம்
அவல் - 4 ஸ்பூன்
வெந்தயம்- 2 ஸ்பூன்
உளுந்து -200 கிராம்
நீர் - தேவையான அளவு
செய்முறை :
இட்லி அரிசி 800 கிராம், அவல் 4 ஸ்பூன், மற்றும் வெந்தயம் 2 டீஸ்பூன் போட்டு 4 மணிநேரம் நன்றாக வைக்க வேண்டும். 200 கிராம் உளுந்தை தனியாக 2 மணிநேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
முதலில் உளுந்ததை 20 முதல் 30 நிமிடங்கள் வரை நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அரிசி, வெந்தயம், அவல் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அரிசி மாவு மிகவும் நைசாக அரைக்காமல் லேசாக நரநரப்புடன் எடுப்பது நல்லது. இரண்டையும் தனித்தனியாகத் தான் அரைக்க வேண்டும். பின்னர் உளுந்து மற்றும் அரிசி மாவு இரண்டையும் போதுமான அளவு உப்பு சேர்த்து கை வைத்து கரைக்க வேண்டும். இந்த மாவை 8 மணி நேரம் நன்றாக புளிக்க விடவும். பிறகு இட்லி ஊற்ற இந்த மாவை எடுத்தால் நன்கு பொங்கி வந்திருக்கும்.
இப்போது இட்லி மாவு பதத்திற்கு தேவை என்றால் சிறிது நீர் சேர்த்து கரைத்து இட்லி வார்க்கலாம். இட்லி தட்டின் மீது துணி விரித்து இட்லி வார்த்தால் பஞ்சு போல மெத் மெத்தென என சூப்பரான இட்லியை பெற முடியும். இட்லி தட்டின் மீது எண்ணெய் தடவி வார்க்கும் போது. அதன் மென்மை தன்மை கண்டிப்பாக சற்று குறைவாகவே இருக்கும்.
இட்லிக்கான சில குறிப்புகள்
பஞ்சு போன்ற இட்லிக்கு அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்தோ அல்லது ஒரே நேர அளவிலோ ஊற வைக்க கூடாது.
இட்லி அரிசி மற்றும் உளுந்து இரண்டையுமே நன்கு அலசிக் கழுவி விட்டு தான் பிறகு ஊற வைக்கவேண்டும்.
வெந்தயத்தை அரிசி அல்லது உளுந்து இரண்டுடனும் ஊற வைக்கலாம். முதல் நாளே வெந்தயத்தை தனியே ஊற வைத்து சேர்த்தால் எந்த அரிசியிலும் இட்லி மென்மையாக வரும். ரேஷன் அரிசியிலும் மென்மையான இட்லியை பெறலாம்.
இட்லி அரிசியை கொஞ்சம் நரநரப்பாகவும், உளுந்தை களி போல மென்மையாகவும் குழைவாகவும் அரைப்பது மிக முக்கியம்.
அரைபடும் உளுந்து ஒரு போதும் சூடேறக்கூடாது. எனவே அதை கிரைண்டரில் அரைக்கும போது தேவைக்கு சிறிது சிறிதாக நீர் சேர்த்து அரைக்கலாம். அதில் ஐஸ்கட்டிகளை போட்டு அரைக்கலாம். அல்லது குளிரூட்டப்பட்ட நீரை பயன்படுத்தலாம்.
உளுந்தை கழுவி போதுமான அளவு நீர் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்தும் ஊற வைக்கலாம். இதனால் உங்கள் இட்லி மிகவும் மிருதுவாக கிடைக்கும்.
தொடர்புடையை செய்திகள்