Ginger for Anti-aging: நரை முதல் ஆன்டிஏஜிங்க் வரை நிவர்த்தி செய்யும் இஞ்சி! இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ginger For Anti-aging: நரை முதல் ஆன்டிஏஜிங்க் வரை நிவர்த்தி செய்யும் இஞ்சி! இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Ginger for Anti-aging: நரை முதல் ஆன்டிஏஜிங்க் வரை நிவர்த்தி செய்யும் இஞ்சி! இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Suguna Devi P HT Tamil
Sep 25, 2024 02:01 PM IST

Ginger for Anti-aging: ஒவ்வொரு நாளும் உடலில் புதுவிதமான தொல்லைகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்யவும் பல வித முறைகள் உள்ளன. பலருக்கு பெரும்பான்மையான பிரச்சனையாக இருப்பது தலையில் வரும் நரை முடி மற்றும் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் ஆகும்.

Ginger for Anti-aging: நரை முதல் ஆன்டிஏஜிங்க் வரை நிவர்த்தி செய்யும் இஞ்சி! இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ginger for Anti-aging: நரை முதல் ஆன்டிஏஜிங்க் வரை நிவர்த்தி செய்யும் இஞ்சி! இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முகம் மற்றும் உடலில் தோன்றும் சுருக்கங்களை போக்க பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளபடுகின்றன.  இந்த சிகிச்சைகள் அதிக விலை மதிப்பு உடையதாகவும், பல பின் விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கின்றன. இந்த மாதிரியான பின் விளைவுகளை தவிர்க்க சில ஆயுர்வேத பொருட்களே போதும். உடலின் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் சக்தி இஞ்சிக்கு உள்ளது. அதில் உள்ள பயன்கள் மற்றும் அதனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என இங்கு பார்ப்போம். 

இஞ்சி சாப்பிடும் முறை 

முதலில் 200 கிராம்  அளவுள்ள இஞ்சியை எடுத்து அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த துண்டுகளை கீறி விட வேண்டும். அதனை ஒரு பாட்டிலில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தேனை உற்ற வேண்டும். இதனை நன்கு ஊற விட வேண்டும். தினமும் காலை இந்த இஞ்சி துண்டை சாப்பிடலாம். தினம் ஒரு துண்டு என சாப்பிட வேண்டும். 

இஞ்சி எனும் இளமை மருந்து

இவ்வாறு தினமும் இஞ்சியை சாப்பிடும் போது, தலையில் உள்ள நரை முடி பரவாமல் தடுக்கும். முகம் மற்றும் கைகளில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். இது போன்ற சுருக்கங்கள் நமது வேலைப் பளுவலோ அல்லது சுற்றுச்சூழல் மாசுபட்டினாலோ ஏற்படலாம். இளம் வயதிலேயே இத்தகையை பிரச்சனைகளால் பதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நன்றாக அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்படும். 

இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது கொலாஜனைப் பாதுகாக்க உதவுகிறது. இதன் வாயிலாக உடலில் தோன்றக்கூடிய சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல் எனும் வேதிப்பொருளின் சேதத்தைத் தடுக்கிறது.

பழங்ககால சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்திலும் இஞ்சியின் சிறப்பம்சங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய இஞ்சியின் அமசங்களால் நாள்தோறும் பல உடல் குறைபாடுகள் நிவாரத்தி செய்யப்படுகின்றன. இதனை நீங்களும் உங்களது உணவில் சேர்த்து அனைத்து விதமான நன்மைகளையும் பெற்றிடுங்கள்.  

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.